Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
போலீஸுக்கே தண்ணி காட்டும் நடிகை மீரா மிதுன்.. பிடிக்க முடியாமல் தவிப்பு
சென்னை: நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரொம்பவே பிரபலமானார்.
இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
பிரச்சினையின் ஆழம் தெரியாமல் சிக்கும் மீரா மிதுன்..அடிப்படை சட்ட ஞானம் இல்லாத பிரபலங்கள்

மாடலிங் டூ சினிமா அறிமுகம்
மாடலிங் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், ஸ்ரீ கணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்தக் கூட்டம்' படத்திலும் மீரா மிதுன் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், அதே வேகத்தில் தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளிலும் சிக்கினார்.

சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்
நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டார் மீரா மிதுன். திரைத்துறையில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். இதனால் அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பிடிவாரண்டும் தலைமறைவும்
இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். மேலும், இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜாரானார். முக்கிய குற்றவாளியான மீரா மீதுன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

தலைமறைவான மீரா மிதுன்
இந்த நிலையில், இந்த வழக்கு 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர். காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள மீரா மீதுன் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,

போலீஸுக்கே டிமிக்கி
அப்போது காவல் துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் எம்.சுதாகர். பிடி வாரண்ட் பிறப்பிக்கபட்ட மீரா மீதுன் பல இடங்களில் காவல்துறை தேடி வருவதாகவும், அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாகவும் கூறினார். மேலும், பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருகிறார். போலீஸார் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதி, கடந்த 2 மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.