போலீஸ்காரர் முன்பே குண்டர்கள் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்!
கொச்சி: குண்டர்கள் தன்னை திடீரென்று தாக்கியதாக பிரபல நடிகை ஒருவர் போலீசில் புகார்
கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை மினு முனீர். இவர் தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
கேரளாவில் வசித்து வரும் இவர், முனீர் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

மினு முனீர் ஆனார்
இதனால் அவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மினுவின் கணவர் முனீர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மினு குரியன் என்ற தனது பெயரை மினு முனீர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவர் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நெடும்பச்சேரி போலீஸ்
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வரும் முனீர் நேற்று நெடும்பச்சேரி
போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது பிளாட்டில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது வாகனத்தை அங்கு நிறுத்தக் கூடாது என்றனர்.

சரமாரி தாக்கினர்
ஏன் நிறுத்த கூடாது என்று கேட்டதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அவர்கள் போலீசார் முன்பே, என்னை சரமாரியாகத் தாக்கினர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என்னை தாக்கிய குண்டர்களை போலீசார் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை
இந்தப் புகார் பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தன்னைக் குண்டர்கள் தாக்கியதாகக் கொடுத்துள்ள புகார், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











