»   »  நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ உள்ள செல்போன் எங்கே?

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ உள்ள செல்போன் எங்கே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சி அடங்கியுள்ள செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தியவுடன் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் யாருக்கோ போன் செய்து தகவல் கொடுத்தார்.

அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

வீடியோ

வீடியோ

நடிகையை மானபங்கம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கொடூர செயலை வீடியோ எடுத்த வெள்ளை நிற செல்போனை சுனில் கொச்சியில் உள்ள ஏரி ஒன்றில் வீசிவிட்டார்.

செல்போன்

செல்போன்

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வீசிய இடத்தை சுனில் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

தேடல்

தேடல்

கொச்சி ஏரியில் செல்போனை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த செல்போன் கிடைத்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்

நடிகர்

நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதில் நடிகரும், இயக்குனருமாக உள்ள ஒரு மலையாள திரையுலக பிரபலத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala Police are in search of a white colour cellphone which was used to film actress's molestation incident. The culprits threw the cellphone in a waterbody in Kochi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil