»   »  நடிகையை மானபங்கப்படுத்த ரூ.30 லட்சம் கூலி: திடுக் தகவல்

நடிகையை மானபங்கப்படுத்த ரூ.30 லட்சம் கூலி: திடுக் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த பல்சர் சுனி தங்களுக்கு ரூ.30 லட்சம் தருவதாக கூறியதாக கைதாகியுள்ள 2 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையை காரில் கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் 2 பேர் கோவையில் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சுனி

சுனி

நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனி எங்களுக்கு ரூ.30 லட்சம் தருவதாக தெரிவித்தார். ஆனால் வேலையை முடித்த பிறகு அவர் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

நடிகை

நடிகை

சுனி பணம் கொடுக்காததால் மானபங்கப்படுத்தியபோது செல்போனில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நடிகையிடம் காட்டி அவரை மிரட்டி பணம் பறிக்க அந்த 2 பேர் முடிவு செய்தார்களாம்.

புகார்

புகார்

நடிகை போலீசில் புகார் அளிக்க மாட்டார், அவரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிகை துணிந்து போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ்

போலீஸ்

தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மறைக்கவே நடிகை முடிவு செய்தாராம். இதை போலீசில் தெரிவிக்குமாறு அவரின் வருங்கால கணவர் தான் வலியுறுத்தினாராம்.

English summary
Kerala police arrested two persons from Coimbatore in connection with actress molestation case. They said that Pulsar Suni promised them Rs. 30 lakh to do this attrocity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil