»   »  நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்

நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை ஒருவர் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் நடிகர் ஒருவரும், புரொடக்ஷன் மேனேஜரும் இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா குற்றம் சாட்டியுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது கொச்சி செல்லும் வழியில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Actress molestation: Director accuses an actor, production manager

இந்நிலையில் இது குறித்து பிரபல மலையாள இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா கூறியிருப்பதாவது,

நடிகர்

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் பிரபல நடிகர் ஒருவர் உள்ளார். அவருக்கும், நடிகைக்கும் இடையே பணப் பிரச்சனை மற்றும் ஒரு பிரச்சனையும் உள்ளது.

கார் டிரைவர்

நடிகை ஒரு முறை படப்பிடிப்புக்காக கோவாவுக்கு காரில் சென்றார். காரை பல்சர் சுனி ஓட்டினார். கோவா சென்ற பிறகு சுனிக்கும், அந்த நடிகருக்கும் தொடர்பு இருப்பது குறித்து அறிந்த நடிகை அவரை பணிநீக்கம் செய்தார்.

மேனேஜர்

நடிகை படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த காரும் புரொடக்ஷன் மேனேஜருக்கு தெரியாமல் கிளம்ப முடியாது.

தொடர்பு

நடிகையின் சம்பவத்திற்கும் புரொடக்ஷன் மேனேஜருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். கார் டிரைவருக்கு குற்றப் பின்னணி இருப்பது புரொடக்ஷன் மேனேஜருக்கு தெரியாதா என்று பைஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Popular Malayalam film director Baiju Kottarakkara said that a famous actor and production manager might be behind actress's molestation incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil