Just In
- 59 min ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!
- 2 hrs ago
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- News
மொத்த கட்சிகளின் குறி இந்த "ஒத்த" தொகுதி மீது.. நிற்க போவது "நம்மவர்" ஆச்சே.. சூடு பறக்குது!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- Automobiles
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதை எதிர்பார்க்கலையே.. இவ்வளவு நாட்களுக்குப் பின்.. பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!
ஐதராபாத்: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அந்த ஒரே நடிகை இப்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், ஒவ்வொரு வாரமும் கலகலப்பாகவும் கண்டிப்பாகவும் ரணகளப்படுத்தி வருகிறார்.
நேற்று ரஜினி.. இன்று கமல்..புது புது கெட்டப்பில் பட்டையை கிளப்பும் ஹரிஷ் கல்யாண்!

முடிவை நோக்கி
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் திக் திடுக் நிகழ்ச்சிகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி வரும் 20 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

அசத்தல் கிண்டல்
இந்த வீட்டில், நடிகரும் இயக்குனருமான சூரிய கிரண், பிரபல இயக்குனர் மற்றும் நடன இயக்குனருமான அம்மா ராஜசேகர், பின்னணி பாக்டர் நோயல், அவினாஸ், லாஸியா உட்பட பலர் கலந்துகொண்டாலும் இவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இருந்தாலும் கிண்டலுக்கும் நையாண்டிக்கும் பஞ்சமில்லை.

மோனல் கஜ்ஜார்
தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரே நடிகை மோனல் கஜ்ஜார்தான். இவர், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

வெளியேறி விடுவார்
இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அகில், இது வெறும் நட்புதான் என்கிறார். அல்லது ஸ்கிரிப்ட்டாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மோனல் கஜ்ஜார், பிக் பாஸ் வீட்டியில் வெளியேறி விடுவார் என பல வாரங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சரியாக தெரியாது
ஆனால், டிஆர்பிக்காக, சேனலே அவரை காப்பாற்றி வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே கடைசி போட்டியாளரான அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். குஜராத்தை சேர்ந்த மோனலுக்கு தெலுங்கு சரியாக தெரியாது என்றாலும் அந்த வீட்டில், 98 நாட்கள் வெற்றிகரமாக இருந்தார்.

14 வாரங்கள்
இதற்காகவே அவரை பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு 3.5 லட்சம் ரூபாய் பேசப்பட்டு இருந்ததாம். தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் அதிக சன்மானம் அவருக்குத்தானாம். 14 வாரங்கள் இந்த வீட்டில் இருந்த அவருக்கு ரூ.49 லட்சம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.