For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….

  |
  திருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு அடிச்சுது ஜாக்பாட்- வீடியோ

  சென்னை: திருமண வாழ்வில் படு பிஸியாக இருக்கும் நமீதா, தற்போது மிகவும் பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புது விதமான நமீதாவாக நம் முன்னர் ஜொலிக்கிறார். இடுப்பழகை காட்டி சைடு போஸ் கொடுத்து சூடு ஏத்துகிறார் நமீதா.

  என்ன விலை அழகே என்று பாடத்தோன்றும் அழகோடு சிவப்பு நிற புடவையில் நம்மை சுண்டி இழுக்கிறார் நமீதா. என்னது நமீதா புடவையிலா என்று ஆச்சரியமாகத் தானே உள்ளது. ஆமாம் மச்சான்ஸ்களை சந்தோஷத்தில் ஆழ்த்தவே புதுமையான ஒரு போட்டோ ஷூட் ஒன்றினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தனது கட்டழகான கவர்ச்சியால் தன் கைப்பிடிக்குள் ஒளித்து வைத்திருந்தவர் நமீதா. கனவுக் கன்னியாக வலம் வந்த நமீதாவிற்கு கோயில் எல்லாம் கட்டினார்கள் அவரது ரசிகர்கள். தமிழ் ஹீரோயின்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

  ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்

  நமீதா கவர்ச்சி

  எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் விஜயகாந்த்திற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பிறகு பல படங்களில் தனது கவர்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நமீதா கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினர். சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால், ஏகபோகமாக உடல் எடை கூடிவிட்டார்.

  பிக்பாஸ் நமீதா

  பிக்பாஸ் நமீதா

  2017ஆம் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீனில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சில நாட்களிலேயே தன்னுடன் நீண்ட கால நண்பரான வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் மணந்து கொண்டார்.

  நமீதா திருமணம்

  நமீதா திருமணம்

  திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறிய நமீதா, தற்போது கணவரை விழுந்து விழுந்து கவனிக்கிறாராம். கவர்ச்சியாக நடித்து வந்த இவர் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவருக்கு சமைச்சு போடப்போகிறார் என்று கூறியவர்கள் அனைவரின் வாயை எல்லாம் அடைத்துவிட்டார் நமீதா.

  குடும்ப வாழ்க்கையில் பிஸி

  குடும்ப வாழ்க்கையில் பிஸி

  இப்படி திருமண வாழ்வில் படு பிஸியாக இருக்கும் நமீதா தற்போது மிகவும் பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புது விதமான நமீதாவாக நம் முன்னர் ஜொலிக்கிறார்.

  கவர்ச்சி போட்டோ சூட்

  கவர்ச்சி போட்டோ சூட்

  இடுப்பழகை காட்டி சைடு போஸ் கொடுத்து சூடு ஏத்துகிறார் நமீதா. இப்படி வாசலிலேயே நம்மை கட்டி போட்டு விட்டால், நாம் எப்படி உள்ளே நுழைய முடியும். வரவேற்பே ஒரு தினுசா இருக்குதே. புத்தகம் படிக்கும் போது கூடவா இவ்வளவு அழகு. அந்த ரோஜாவே நமீதாவின் அழகிற்கு முன்னர் வெட்கப்பட்டு தலை குனிந்து கொள்கிறது.

  காந்தக்கண்கள்

  காந்தக்கண்கள்

  புத்தகங்கள் கதைகள் சொல்கிறதோ இல்லையோ நம் நமீதாவின் காந்தக் கண்கள் பல கதைகள் சொல்கிறது. யார் இந்த தேவதை, சிரிப்பில் நம்மை சிதற வைக்கிறாள். பட்டுப்புடவை உடுத்தி நம் நெஞ்சங்களையெல்லாம் பட்டு போல பறக்க வைக்கிறார். கன்னத்து குழியில் நம்மை எழமுடியாதபடி தள்ளிவிட்டார் இந்த தேவதை.

  சினிமாவில் மீண்டும் நமீதா

  சினிமாவில் மீண்டும் நமீதா

  கவர்ச்சி மட்டும் தான் வரும் என்று கூறியவர்கள் இந்த போட்டோ ஷூட் பார்த்தபிறகு தங்களது எண்ண ஓட்டங்களை மாற்றிக்கொள்ளத் தான் வேண்டும். கூடிய விரைவில் நாம் நமீதாவை வேறு ஒரு பரிமாணத்தில் திரைப்படங்களில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கலாம்.

  English summary
  Namitha, who is busy in her marriage, now shines like a new kind of Namitha who is now shooting a photoshoot in the most traditional Chettinadu houses. Namitha poses in the waist and gives warmth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X