Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இளம் படைப்பாளிகளுக்கு புதிய ஓடிடி தளம்… நமீதா தொடங்கினார் !
சென்னை : நடிகை நமீதா புதிய ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார்.
அதற்கு நமீதா தியேட்டர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.
கொரோனா
அவலத்திலிருந்து
மக்களை
காப்பாத்துங்க…
நடிகர்
சிவக்குமார்
முதல்வருக்கு
வேண்டுகோள்
!
புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் படைப்பாளிகளுக்கு இத்தளம் பேருதவியாக இருக்கும், சிறு தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை இதில் வெளியிடலாம்.

நமீதா தியேட்டர்ஸ்
மகா நடிகன், இங்கிலிஸ்காரன், பில்லா மற்றும் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை நமீதா. இவர் புதிய ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார். அதற்கு நமிதா தியேட்டர்ஸ் பெயர் வைத்துள்ளார். இந்த ஒடிடி தளத்தில் நமீதாவின் நண்பர் ரவி வர்மா பாட்னராகவும், நமீதா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.

பல யோசனைகள்
இந்த ஒடிடி தளம் குறித்து நடிகை நமீதா கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள் என்னை மிகவும் நேசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் எதையாவது திருப்பித் தர விரும்பினேன். எனக்கு பல்வேறு யோசனைகள் தோன்றின. இப்போது தான், நான் ரவி வர்மாவை சந்திதேன். அவர், டிப்ளோமா பட்டதாரி, ஃபிலிம் டெக்னாலஜியில் மற்றும் பல கார்ப்பரேட் வணிகங்களில் பணிபுரிந்துள்ளார்.

ரவிவர்மாவின் ஐடியா
ரவி வர்மா தான், உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒரு தளத்தைத் தொடங்கலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை முழுமையாக ஊக்குவிக்கும் மற்றும் காட்சிப்படுத்தும் ஒரு OTT தளத்தை பரிந்துரைத்தவர் ரவி தான் "என்று நமீதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தளம்
புதியதாக திரைத்துறைக்கு வருபவர்களுக்கு இது மிகப்பெரிய தளமாக அமையும், ஒரு நடிகராகவோ, இயக்குநராகவோ அல்லது புதிய தயாரிப்பாளராகவோ இருக்கலாம் அனைவரையும் ஆதரிப்போம் என்றார். மேலும், அடுத்த மாதம் ஒரு நல்லத் தேதியில் நமீதா தியேட்டர்ஸில் படங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.