twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஒருவேளை வருமான வரின்னதும் பயந்திருப்பாரோ?' தனது ரூலை லேடி சூப்பர் ஸ்டார் தளர்த்தியது ஏன்?

    By
    |

    சென்னை: வருமான வரித்துறை நடத்திய பெண்கள் பாதுகாப்புப் பேரணியை தொடங்கி வைத்திருக்கிறார் நயன்தாரா.

    மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

    இதை, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று காலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பேரணி நிறைவு விழா

    பேரணி நிறைவு விழா

    ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய பேரணி எத்திராஜ் சாலை, கல்லூரி சாலை, ஹாடேவ்ஸ் சாலை வழியாக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்ட் கன்வென்ட் அரங்கத்தை அடைந்தது. அங்கு பேரணி நிறைவு விழா நடந்தது. கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    மகளிர் தினம்

    மகளிர் தினம்

    இந்த பேரணியில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வகையில் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தப் பேரணி இன்று நடந்தது.

    நடிகை நயன்தாரா

    நடிகை நயன்தாரா

    இந்தப் பேரணியை நடிகை நயன்தாரா தொடக்கி வைத்தது கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக நடிகை நயன்தாரா எந்த விழாக்களுக்கும் செல்வதில்லை. தான் நடித்த பட புரமோஷன்களுக்கும் வருவதில்லை. இதுபற்றி முதலிலேயே சொல்லி விடுவாராம். அதோடு, அவருக்கு போடப்படும் ஒப்பந்தத்திலும் அதை குறிப்பிட்டு விடுவாராம். இதனால் அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதும் இல்லை.

    வருமான வரித் துறை

    வருமான வரித் துறை

    விருது விழாக்கள், கடை திறப்பு விழாக்கள் என்றால் சென்று வருவார். இந்நிலையில் அவர் வருமானவரித் துறை நிகழ்ச்சியில் பங்கேற்றது கேள்வியை எழுப்பியுள்ளது. ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதுபற்றி கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு வேளை, வருமான வரித்துறை என்பதால் பயந்திருப்பாரோ? என்று சில ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் மகளிர் தினம் என்பதால் கலந்துகொண்டிருப்பார் என்று கூறியுள்ளளனர்.

    English summary
    Nayanthara, hailed as the Lady Superstar of South Indian cinema, makes it a point to not attend any public events.However, she has flexed her no-event rule for Women's Day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X