நிக்கி கல்ராணி கர்ப்பமா? இணையத்தில் குவியும் வாழ்த்து!
சென்னை : நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் காட்டுத்தீபோல பரவி வருகிறது.
நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால், ஆதி, ஜிவி பிரகாஷ் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி, யாகவராயினும் நாகாக்க, கோ2, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், ஹர ஹர மகாதேவகி, ராஜவம்சம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் ஜோடி
யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போதே காதல் வயப்பட்டார். இவர்களது காதல் விவகாரம் சினிமாவில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், காதல் குறித்து இருவரும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தன. இதையடுத்து, ஆதியின் குடும்ப விழா ஒன்றில் நிக்கி கல்ராணி கலகலந்து கொண்டதை அடுத்து இவர்கள் காதலிப்பது உறுதியானது.

காதல் திருமணம்
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வரும் நிக்கி கல்ராணிக்கும் ஆதி பிணிசெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் மே மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கர்ப்பமா?
திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடி விதவிதமான போட்டோக்களை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் 100வது திருமண நாளை கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டானர். இந்நிலையில் நிக்கி கல்ராணி தற்போது கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்தி காட்டுத் தீ போல பரவி வருகிறது. இந்த செய்தியை கேள்விபட்ட நிக்கியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











