Don't Miss!
- News
களைகட்டும் பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. திண்டுக்கல் மாவட்டத்தில் ஜன. 27இல் உள்ளூர் விடுமுறை
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
சென்னை : தெலுங்கு சினிமாவில் பெரும் ரசிகர்களை கொண்டு வலம் வரும் நடிகர் நானி தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
ஈ-யைக் கொண்டு உருவான நான் ஈ படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகி மிகச் சிறந்த நடிகராக அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
இந்த நிலையில் தன்னுடைய உடலை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி நடிகைகள் ட்ராயிங் செய்த வீடியோ ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

கேங் லீடர்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் ரசிக்கும் நடிகராக விளங்கி வரும் நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கேங் லீடர் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்
தற்போது ஷியாம் சிங்கா ராய் மற்றும் டக் ஜெகதீஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டக் ஜெகதீஸ் திரைப்படத்தை இயக்குனர் சிவா நிர்வாண இயக்கி வருகிறார் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதன் படபிடிப்பு மொத்தமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பின்னடைவை சந்தித்தது
எதையும் மிக வித்தியாசமாக செய்யும் பண்பு கொண்ட நடிகர் நானி முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டிய வீ திரைப்படம் கொரானா சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது பின் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் வசூல் ரீதியாக மிகவும் பின்னடைவை சந்தித்தது.

நடிகை நிவேதா தாமஸ்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானி பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் இவரது மனைவி அஞ்சனா என இருவரும் நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரையும் திறமையை காட்டியுள்ள வீடியோ ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக அதில் நானி கொடுக்கும் எக்ஸ்பிரஷன் பேஷ் பேஷ்.