நான் அம்மாவாகப் போறேன்..குட் நியூஸ் சொன்ன நடிகை பூர்ணா..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : நடிகை பூர்ணா அம்மாவாகப்போகும் மகிழ்ச்சியான தகவலை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார். இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம் சினிமாவிற்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார்.
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பூர்ணா அறிமுகம் ஆனார். அதன் பின் கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அகண்டா, தலைவி, த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலியை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் ஆஷிஃப் அலி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பூர்ணாவுக்கும், ஆஷிஃப்புக்கும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிராண்டானது.

துபாயில் திருமணம்
இதையடுத்து காதும் காதும் வைத்தபடி துபாயில் கடந்த ஜூன் 12ந் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது என்றும், விசா பிரச்சனை காரணமாக பலர் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். மேலும், திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

மகிழ்ச்சியான செய்தி
இதையடுத்து, நடிகை பூர்ணா தனது யூடியூப் சேனலில் அம்மாவாகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை தனது தாய் தந்தை முன்னிலையில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், என்னுடைய கல்யாணத்திற்கு அனைவரும் இணையத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்து இருந்தீர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த யூடியூப் வீடியோ ஒரு ஸ்பெஷலான வீடியோ என்னவென்றால், நான் அம்மாவாக போகிறேன். அந்த மகிழ்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களின் ஆதரவும் வாழ்த்தும் என்றும் எனக்கு வேண்டும் என கூறியுள்ளார்.

குவியும் வாழ்த்து
இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு அசீர்வாதம் செய்து, கேட் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும், அம்மாவாகப்போகும் நடிகை பூர்ணாவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என பூர்ணா கூறியிருந்த நிலையில் தற்போது கர்ப்பமடைந்துள்ளதால் தொடர்ந்து நடிப்பாரா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











