»   »  'அன்புச்செழியன் போன்ற **** சினிமாவில் இருக்கக்கூடாது' - கெட்டவார்த்தையில் திட்டித் தீர்த்த நடிகை!

'அன்புச்செழியன் போன்ற **** சினிமாவில் இருக்கக்கூடாது' - கெட்டவார்த்தையில் திட்டித் தீர்த்த நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'அன்புச்செழியன் போன்ற **** சினிமாவில் இருக்கக்கூடாது'- வீடியோ

சென்னை : சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என அவரே கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டு அகால மரணமடைந்ததற்கு ரசிகர்கள் வருத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

அதே சமயம் அன்புச்செழியனுக்கு ஆதரவாக சில இயக்குநர்களுன் நடிகர்களும் பேசி வருகிறார்கள். இதனிடையே நடிகை பூர்ணா, அசோக்கின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார்.

ஆதரவு தெரிவிக்கும் இயக்குநர்கள்

ஆதரவு தெரிவிக்கும் இயக்குநர்கள்

ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பணம் வாங்கி படமெடுத்த சில தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தத்தால் ஒன்று கூடி, அசோக் குமாருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தாமல் பைனான்சியரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.

நடிகை பூர்ணா

தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் கடைசியாகப் பணிபுரிந்த 'கொடி வீரன்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய ட்விட்டரில், 'அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள்.' என ட்வீட் செய்திருந்தார்.

அன்புச்செழியன் சினிமாவில் இருக்கக்கூடாது

அசோக் குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை விமர்சித்து மூன்று நாட்களுக்கு முன்பே இன்னொரு ட்வீட்டும் செய்திருந்தார் பூர்ணா. 'அன்புச்செழியன் போன்ற ... நமது சினிமாவில் இருக்கக் கூடாது,' என பூர்ணா ட்வீட் செய்திருந்தார்.

கெட்டவார்த்தையில் திட்டிய பூர்ணா

நேற்று திரும்பவும், 'அவர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். நாம் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியும். ...அன்புச்செழியனுக்கு மிகப் பெரும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இதற்காகவது நாம் ஒன்றாகக் கை கோர்ப்போம்,' என்று ட்வீட் செய்திருக்கிறார்.

கோவத்தில் திட்டிய பூர்ணா

ஆனால், அன்புச்செழியன் அரசியல்வாதிகளின் ஆதரவோடு இருக்கிறாரே என ரசிகர் ஒருவர் பூர்ணாவிற்கு ரிப்ளை செய்தார். 'கடவுள் என ஒருவர் இருக்கிறார். அசோக் குடும்பத்தைப் போலவே இவருக்கும் ஒரு குடும்பம் இருப்பதால் யோசிக்கிறார் என நினைக்கிறேன். அந்தக் கண்ணீர் பதில் சொல்லும்' என கெட்டவார்த்தையைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார் பூர்ணா.

தைரியமான நடிகை

தைரியமான நடிகை

அன்புச்செழியனுக்கு ஆதரவாக சீனு ராமசாமி, விஜய் ஆன்டனி, சுந்தர் சி, தேவயானி, மனோபாலா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு நடிகை எதைப் பற்றியும் கவலைப்படாமல் இப்படி தைரியமாக ஒரு ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Company productions producer Ashok Kumar has committed suicide due to financier Anbuchezhiyan's threat. At the same time, some directors are also talking in favor of financier Anbuchezhiyan. Meanwhile, actress Poorna has slams anbuchezhiyan in bad words.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil