வாவ்.. எவ்ளோ க்யூட்.. மகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய நடிகை பிரணிதா.. என்ன பெயர் தெரியுமா?

பெங்களூரு: கணவருக்கு சமீபத்தில் பீமண அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்த புகைப்படம் டிரெண்டான நிலையில், அடுத்ததாக தனது மகளின் புகைப்படங்களை முதல் முதலாக சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா.

கன்னட நடிகையான பிரணிதா, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை பகிர்ந்த அவர், தற்போது குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரணிதாவுக்கு பெண் குழந்தை

பிரணிதாவுக்கு பெண் குழந்தை

தமிழில் நடிகர் கார்த்தியின் சகுனி மற்றும் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரணிதா கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் சம்யத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டார். கர்ப்பமாக இருந்த போட்டோக்கள் முதல் குழந்தை பெற்று மருத்துவமனையில் இருந்த புகைப்படங்கள் வரை அத்தனையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வந்தார் நடிகை பிரணிதா.

குட்டி பிரணிதா

குட்டி பிரணிதா

மருத்துவமனையில் இருந்த போது கூட மகளின் முகத்தை மறைத்து இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக அந்த அழகுக் குட்டிச் செல்லத்தின் அழகான முகத்தை ரசிகர்களுக்காக காட்டி உள்ளார். குழந்தையின் பிஞ்சு முகத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களுக் அப்படியே குட்டி பிரணிதா சூப்பராக இருக்கிறாரே என்றும் செம க்யூட் என்றும் கொஞ்சி வருகின்றனர்.

என்ன பெயர்

என்ன பெயர்

மேலும், தனது மகளுக்கு அர்னா என பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அர்னா என்றால் மலை என்றும் வலிமை என்றும் பொருள். பிரணிதாவின் பெயருக்கு எக்ஸ்பர்ட், நிபுணத்துவம் வாய்ந்தவள் என்கிற பொருள் உள்ள நிலையில், தனது மகளுக்கும் அருமையான அர்த்தத்துடன் அழகான தனித்துவமான பெயரை சூட்டி இருக்கிறார் நடிகை பிரணிதா.

பாத பூஜை

பாத பூஜை

நடிகை பிரணிதா தொடர்ந்து இந்து மத கொள்கையை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் உரக்க சொல்லி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தையும், பீமண அமாவாசை அன்று மனைவிமார்கள் இப்படி செய்ய வேண்டும் என போஸ்ட் போட்டு பலரது கவனத்தை கவர்ந்தார்

Recommended Video

Actress Sneha | முதல் படம் A. R. Rahman இசையில் நடித்தது என்னோட Luck | *Interview
குழந்தைக்கு வாழ்த்து

குழந்தைக்கு வாழ்த்து

குழந்தையின் பெயர் சூட்டு விழாவை நடத்தி முடித்துள்ள நிலையில், அதன் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் பிரணிதா. குழந்தையை பார்த்த பலரும் அதனை வாழ்த்தி வருகின்றனர். கடைசியாக இந்தியில் வெளியான புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா மற்றும் ஹங்காமா 2 படங்களில் நடித்திருந்த பிரணிதா கன்னடத்தில் உருவாகி வரும் ராமண அவதாரா படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X