காதல்னா இப்படி இருக்கணும்..பீச் ஓரத்தில் புது வீடு..பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : நடிகை பிரியா பாவனி சங்கர், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
சினிமா என்னும் மாய உலகில் ஜொலிப்பதற்கு லக் மிகவும் முக்கியமான ஒன்றாகும். என்னதான் அழகும், திறமையும், நடிப்பின் மீது ஆர்வமும் இருந்தாலும் லக் என்று ஒன்று இல்லை என்றால், சினிமாவில் ஜெயிக்க முடியாது.
அப்படி தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர்
சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இணையத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். இதில்கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.

ஏராளமான படங்கள்
இதையடுத்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பாவனி சங்கர், சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ்
தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியா பாவனி சங்கரை பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்து விட்டதாம். ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் போதும் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு , பேரம் பேசாமல் புன் சிரிப்போடு வாங்கிக் கொள்வதால், பிரியா பவானி சங்கர் பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.

கனவு நினைவானது
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதவில்,18 வயது இருக்கும் பொழுது நாங்கள் கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் எங்களின் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

பீச் ஓரத்தில் புது வீடு
தற்போது அந்தக் கனவு நினைவாகி உள்ளது, நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்தப் பதிவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் இந்த காதல்ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











