அந்த இடத்தில் பச்சை குத்தி்க்கொள்ள தயாரிப்பாளர் கட்டாயப்படுத்தினார்: சர்ச்சையை கிளப்பிய பிரியாமணி
ஐதராபாத்: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி, தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் பிரியாமணி.
இந்நிலையில், தனது ஆரம்பகால திரைப் பயணம் குறித்து பேசியுள்ள பிரியாமணி, தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அது ஒரு கவர்ச்சிக் காலம்
2003ல் தெலுங்கில் வெளியான 'எவரே அதகடு' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பிரியாமணி. தமிழில் பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர், அதனைத் தொடர்ந்து 'அது ஒரு கனா காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியானார். இந்தப் படத்தில் கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கடித்த பிரியாமணி, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், பிரியாமணிக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தன.

தேசிய விருது நடிகை
தமிழில் பிரியாமணியின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது 'பருத்திவீரன்.' அமீர் இயக்கத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிரியாமணி, நடிப்பில் அதகளம் செய்திருந்தார். இந்த நடிப்பு அவருக்கு தேசிய விருதையும் வென்று கொடுத்தது. தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கு, கன்னடத்திலும் சூப்பரான கேரக்டர்களில் நடித்து கலக்கியவர் பிரியாமணி.

தயாரிப்பாளர் மீது புகார்
2017ல் தொழிலதிபர் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரியாமணி, தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்தாண்டு சமந்தா, மனோஜ் பாஜ்பாய் ஆகியோருடன் பிரியாமணி நடித்திருந்த 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தனது திரையுலக வாழ்வின் ஆரம்ப காலம் குறித்து பேசியுள்ள பிரியாமணி, தயாரிப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு பிடிக்காத வேலைகளை அவர் செய்ய சொன்னதாக பகீர் கிளப்பியுள்ளார்.

அந்த இடத்தில் பச்சை
இதுதொடர்பாக மனம் திறந்துள்ள பிரியாமணி, "நான் நடித்த ஒரு படம் பாதி முடிந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் என்னை அணுகினார். அவர் தொப்புள் அருகே பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் அதை செய்தேன். சினிமாவில் ஹீரோயின்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத வேலைகளை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது" எனக் கூறியுள்ளார். ஆனாலும் அந்த தயாரிப்பாளர் யார் என்ற விவரத்தை பிரியாமணி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











