»   »  படுகவர்ச்சியாகக் களமிறங்கும் ராய் லட்சுமி - 'ஜூலி -2' ட்ரெய்லர்

படுகவர்ச்சியாகக் களமிறங்கும் ராய் லட்சுமி - 'ஜூலி -2' ட்ரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட் படமான ஜூலி -2வில் நடிகை ராய் லட்சுமி இதுவரை ரசிகர்கள் காணாத அளவிற்குக் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நல்ல படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் அலைகிறார் ராய் லட்சுமி. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கத் தொடங்கியவருக்கு ரசிகர்கள் குவிந்த அளவுக்கு மார்க்கெட்டும் எகிறியது.

பிறகு, தமிழ், மலையாளத்தில் வாய்ப்புக் குறையவே, பாலிவுட் பக்கம் கால்வைத்துப் பார்த்தார். அதற்கு வசதியாக மும்பையில் குடியேறினார். இதனிடையே அவருக்கு பாலிவுட் ஹிட்டான 'ஜூலி' படத்தின் 2-வது பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்பட்டது. 'ஜூலி -2' படத்தை தீபக் ஷிவதாசன் இயக்குகிறார்.

இந்நிலையில், 'ஜூலி -2' படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. இதுவரை எந்தப் படத்திலும் ரசிகர்கள் பார்த்திராத கவர்ச்சியில் தோன்றிய ராய் லட்சுமி இப்போது ரசிகர்களின் கவர்ச்சிக் கன்னியாகியிருக்கிறார்.

English summary
'Julie -2' trailer out now. Actress Raai laxmi has done a very glamour role in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil