twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் போதைப்பொருள் விவகாரம்.. ஜெயம் ரவி பட ஹீரோயினுக்கு அதிரடி சம்மன்.. தீவிரமாகும் விசாரணை!

    By
    |

    பெங்களூரு: சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் போதைபொருள் விவகாரத்தில் ஜெயம் ரவி பட ஹீரோயினுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

    அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோர் என்பது தெரியவந்தது.

     கடலே சூடாகிடும் போல.. பிங்க் பிகினியில் போஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்.. குவியுது லைக்ஸ்! கடலே சூடாகிடும் போல.. பிங்க் பிகினியில் போஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்.. குவியுது லைக்ஸ்!

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை, பறிமுதல் செய்தனர். கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி, திரையுலகினருக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதாகவும், இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகவும் பெங்களூருவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் சகோதரரும், கன்னட பட இயக்குனருமான இந்திரஜித் லங்கேஷ், சில நாட்களுக்கு முன் புகார் கூறியிருந்தார்.

    போலீஸ் நோட்டிஸ்

    போலீஸ் நோட்டிஸ்

    இது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தனக்கு தெரிந்த தகவலை சொல்ல தயாராக இருக்கிறேன் என்றும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார். இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

    பெயர் பட்டியல்

    பெயர் பட்டியல்

    அதன்படி ஆஜரான அவர், கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்பாடு குறித்து தனக்கு தெரிந்த தகவல்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தும் 15 பேரின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்தார். அவர்கள் யார் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.

    குற்றப்பிரிவு போலீசார்

    குற்றப்பிரிவு போலீசார்

    இந்நிலையில் இந்த பிரச்னையில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகையின் நண்பர் ரவி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து நடிகை ராகிணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதைபொருள் விவகாரம் குறித்து அவரிடம் விசாரிக்க இருக்கின்றனர்.

    ஜெயம் ரவி ஜோடியாக

    ஜெயம் ரவி ஜோடியாக

    நடிகை ராகிணி, தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படம் வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐபிஎஸ், கெம்பே கவுடா, வில்லன், சிவா, பங்காரி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாளத்தில் கந்தகார் படத்தில் நடித்துள்ள அவர், இந்தியில் ஆர்.ராஜ்குமார் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

    English summary
    Actress Ragini Dwivedi has been summoned by the Central Crime Branch (CCB) in relation to the Sandalwood drug racket case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X