Just In
- 8 min ago
'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!
- 1 hr ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
Don't Miss!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- News
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
- Sports
இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆத்தாடி இவருக்கும் வந்திருச்சாமே கொரோனா.. தனிமை சிகிச்சையில் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்!
சென்னை: பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வருடத்தின் கொடூரம், கொரோனா. சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்று உலகம் முழுவதும் பரவியது.
நைஸ்ஸா பேசி ஆரியை கோர்த்துவிடும் பாலாஜி.. என்னல்லாம் நடக்கப் போகுதோ.. அடுத்த புரமோ!
இந்தியாவிலும் வேகமாகப் பரவியது. அதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

சரிந்து வருகிறது
இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சமீப காலமாக, இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

உயிர்கொல்லி தொற்று
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,116 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,46,111 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிர்கொல்லி தொற்றுக்கு சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த பல நடிகர், நடிகைகள் சிகிச்சைக்குப் பின் குணமாகித் திரும்பி இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்
நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நிக்கி கல்ராணி, சுமலதா, நடிகை தமன்னா, கீர்த்தி சனான், அர்ஜுன் கபூர், பிருத்விராஜ், வருண் தாவன். நடிகர் சரத்குமார் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைப் பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில், தனக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். நன்றாக இருக்கிறேன்.

பாதுகாப்பாக இருங்கள்
சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கமலின் இந்தியன்
தமிழில், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.