'என்னை விட்டு ஒரேடியா இப்படி போயிட்டானே...' கண்ணீர் விட்டுக் கதறிய 'மாஸ்டர்' நடிகை!

By

சென்னை: தன்னுடைய செல்லம் இறந்துவிட்டதை அடுத்து மாஸ்டர் பட நடிகை வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Save Street Dogs | Namitha humble request | Tamannah Tips

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா. இவர் இப்போது சின்னத்திரையை விட்டுவிட்டு படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரம்யா.

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி

பிறகு 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு மங்காத்தா படத்தில் செய்தியாளராக நடித்த அவர், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் ஃபிரண்டாக நடித்திருந்தார். அடுத்து சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, ஜெயம் ரவி, சாயிஷா நடித்த வனமகன், டாப்ஸி நடித்த கேம் ஓவர், அமலாபாலின் ஆடை படங்களில் நடித்திருந்தார்.

மாஸ்டர்

இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு தகவலை எமோஷனலாகப் பகிர்ந்திருந்தார். அதில், 'என் கிங். 2012-2020. மிலோ! நம் நாடு ஒரு வைரஸை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், என் மிலோ, கடுமையான நோயால் போராடிக் கொண்டிருந்தான்.

மிலோவுக்கு முத்தம்

மிலோவுக்கு முத்தம்

அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்ட மிலோ, கடைசியாக இந்த உலகத்தை விட்டு இன்று (நேற்று) பிரிந்துவிட்டான்' என்று கூறியிருந்தார். அதோடு, அந்த செல்ல நாயின் (ஜெர்மன் ஷெபர்ட்) சில போட்டோக்களையும் அவர் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு போட்டோவில் அவர், மிலோவுக்கு முத்தமிடுகிறார். காரில் உட்கார்ந்திருப்பது போலவும் வீட்டில் விளையாடுவது போலவும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

இனி இல்லை

இனி இல்லை

மேலும், கடந்த சில நாட்களாக, மிலோ உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானேன். என்னால் அதை வெளிப்படுத்த முடியவில்லை. கடும் வேதனையை உணர்கிறேன். என்னில் ஒரு பகுதியாக இருந்த மிலோ, என்னை விட்டு ஒரேடியாகப் போய்விட்டான். எனக்கு நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கிக்கொண்டிருந்த மிலோ, இனி இல்லை.

என் குழந்தையே

என் குழந்தையே

மிலோ குணமடைய பிரார்த்தனை செய்த நண்பர்களுக்கு நன்றி. என் மிலோ, என் குழந்தையே, என் அன்பே, எவரும் தந்திடாத மகிழ்ச்சியை நீ எனக்கு கொடுத்தாய்...' என்று உருக்கமாக ரம்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து ரம்யாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிலோவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X