»   »  அந்த ஆளை அப்பவே சப்புன்னு அறையாம விட்டுட்டேனே: நடிகை வருத்தம்

அந்த ஆளை அப்பவே சப்புன்னு அறையாம விட்டுட்டேனே: நடிகை வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அந்த ஆளு என் கையை பிடித்து முறுக்கியபோதே ஓங்கி ஒரு அறை விடாமல் போய்விட்டேனே என வருத்தமாக உள்ளது என்று நடிகை பிரயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.

பிசாசு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் ரஹீம் பிரயாகாவின் கையை முறுக்கி தாக்கியுள்ளார். இது குறித்து பிரயாகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ரஹீம்

ரஹீம்

மேக்கப் மேன் ரஹீம் என்னை திட்டியதை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் பார்த்தனர். கேவலம் ஒரு பொம்பள என்னை பார்த்து கையை நீட்டுற என்று கூறி அவர் என்னை தலையில் இருந்து கால் வரை அசிங்கமாக பார்த்தார்.

கை

கை

ரஹீம் என் வலது கையை முறுக்கினார். இயக்குனர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். இந்த விஷயத்தை பெரிதாக்கினால் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டேன்.

மன்னிப்பு

மன்னிப்பு

ரஹீம் தனது செயலுக்காக படக்குழு முன்பு என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் நான் தான் ரஹீமை அறைந்ததாக ஆன்லைனில் வதந்தி பரவி வருகிறது. ஆளாளுக்கு என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அறை

அறை

நடந்த சம்பவத்திற்காக மக்கள் என்னை குறைகூறி அசிங்கமாக திட்டுகிறார்கள். ரஹீம் என் கையை முறுக்கியபோதே ஓங்கி ஒரு அறைவிடாமல் போனேனே என்று தற்போது வருத்தமாக உள்ளது என்றார் பிரயாகா.

English summary
Actress Pryaga Martin said that she is regretting now for not slapping makeup man Raheem when he twisted her right arm in the shootingspot of Vishwasapoorvam Mansoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil