»   »  நடிகை ரேகா மோகன் தற்கொலையா, இல்லை...: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

நடிகை ரேகா மோகன் தற்கொலையா, இல்லை...: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: நடிகை ரேகா மோகன் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை. மாறாக மாரடைப்பால் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் ரேகா மோகன்(45). கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வந்தார்.

அவரது கணவர் மோகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

மரணம்

மரணம்

புற்றுநோயால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த ரேகாவுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த வாரம் அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விஷம்

விஷம்

ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார். அவர் அருகே ஒரு கிளாஸில் குளிர்பானம் இருந்தது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கக்கூடும் என செய்திகள் வெளியாகின.

மாரடைப்பு

மாரடைப்பு

ரேகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது என மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிவி தொடர்கள்

டிவி தொடர்கள்

பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்தும் கேரள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் ரேகா. அதிலும் குறிப்பாக மாயம்மா சீரியல் அவருக்கு பெயரும், புகழும் பெற்றுத் தந்தது.

English summary
According to post mortem report, actress Rekha Mohan who was battling cancer died of cardiac arrest.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil