வெப் சீரிஸூக்கு திரும்பும் ஹீரோயின்கள்... காஜல், தமன்னா, சமந்தாவைத் தொடர்ந்து இவரும் வந்துட்டாரே!

By

கொச்சி: நடிகை ரிமா கல்லிங்கல், இந்தி வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இத்தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என எல்லோரும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பி வருகின்றனர்.

முன்னணி நடிகைகளான, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பெரும்பாலான நடிகைகள் இதில் நடித்துவருகின்றனர்.

வெப் தொடர்கள்

வெப் தொடர்கள்

ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான், பிளிப்கார்ட் உட்பட நிறுவனங்கள் இதைத் தயாரித்து வருகின்றன. ஏற்கனவே, இந்தியில் வெப் தொடர்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழிலும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வெப்சீரிஸை இயக்க இயக்க இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குற்றப்பரம்பரை

குற்றப்பரம்பரை

இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதவ் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், சிம்புதேவன் உட்பட பலர் வெப் தொடர்களை இயக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார். பாரதிராஜா அவரது கனவுபடமான குற்றப்பரம்பரையை வெப் சீரிஸாக இயக்க இருக்கிறார்.

ரீமா கல்லிங்கல்

ரீமா கல்லிங்கல்

இந்நிலையில் நடிகை ரீமா கல்லிங்கலும் வெப் சீரிஸில் நடிக்கிறார். மலையாள நடிகையான இவர், தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி, ஜீவா நடித்த கோ படங்களில் நடித்துள்ளார். பிளிப்கார்ட் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸுக்கு, ஜிந்தகி இன் ஷார்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தி தொடரான இதில், 7 கதைகள் இடம்பெறுகின்றன.

நீனா குப்தா

வித்தியாசமான மனிதர்களை பற்றிய கதையான இதில், ரீமா கல்லிங்கலுடன் சஞ்சய் கபூர், நீனா குப்தா, திவ்யா தத்தா, மன்ஜோத் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீமா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரும் 19 ஆம் தேதி முதல் இது வெளியாகிறது. 12 ஆம் தேதி டிரைலர் வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X