For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கும் என் மகளுக்கும் இப்படி நடந்திருக்கக் கூடாது... நடிகை ரோஜா சொன்ன அதிர்ச்சியான உண்மை

  |

  சென்னை: 90களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா.
  அவரும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், 2002ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
  ரோஜா - ஆர்கே செல்வமணி தம்பதியினரின் மூத்த மகள் அன்ஷுகா மாலிகா அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருகிறார்.
  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வெளியான அன்ஷுகா மாலிகாவின் ஆபசமான புகைப்படங்கள் குறித்து நடிகை ரோஜா விளக்கம் கொடுத்துள்ளார்.

   ரோஜா தொடர் நாயகனின் அடுத்த சீரியல்.. இந்த முறை சன் டிவியில் இல்லையா? ரோஜா தொடர் நாயகனின் அடுத்த சீரியல்.. இந்த முறை சன் டிவியில் இல்லையா?

   ரோஜாவும் செல்வமணியும்

  ரோஜாவும் செல்வமணியும்

  90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. 1992ம் ஆண்டு ரிலீஸான செம்பருத்தி திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தை ஆர்கே செல்வமணி இயக்கியிருந்தார். அப்போது முதல் அவர்கள் இடையே மலர்ந்த காதல், 2002ம் ஆண்டு திருமணமாக கனிந்தது. காதலிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சின்ன திரை நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வரும் ரோஜா, இன்னொருபக்கம் முழு நேர அரசியலில் பிஸியாகிவிட்டார்.

   மகளை நினைத்து வேதனை

  மகளை நினைத்து வேதனை

  ரஜினி, சிரஞ்சீவி உட்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள ரோஜா, 1999ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் 2009ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவாகவும், தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது மகளின் ஆபாசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

   பிரபலம் என்றால் சகஜம் தான்

  பிரபலம் என்றால் சகஜம் தான்

  ரோஜாவின் பேட்டியில், "நான் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அவதூறுகள் செய்யப்படுகின்றன. பிறந்த நாளில் என் சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்ஃபிங் செய்தும், என்னைப் பற்றியும் ஆபாசமான படங்கள் வெளியிட்டு வருகின்றனர்."

   மகளுக்கு புரிய வைத்துள்ளேன்

  மகளுக்கு புரிய வைத்துள்ளேன்

  மேலும், "அதை பார்த்து என் மகள் மிகவும் கவலைப்பட்டாள். இதெல்லாம் நமக்குத் தேவையா? என என்னிடம் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பிரபலங்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம்தான், இவற்றை பெரிதுபடுத்தி அதில் கவனம் செலுத்தினால், நம்மால் முன்னேற முடியாது என குழந்தைகளுக்கு புரிய வைத்துள்ளேன்" என்றார்.

   நடிக்க விருப்பம் இல்லை

  நடிக்க விருப்பம் இல்லை

  முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர், ரோஜாவின் மகள் துருவ் விக்ரம் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்போது அதுகுறித்து இயக்குநர் ஆர்கே செல்வமணி விளக்கம் கொடுத்திருந்தார். "எங்கள் மகள் அன்ஷுகா மாலிகா அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் இந்தியா திரும்ப இன்னும் 4 ஆண்டுகள் ஆகும். அதனால் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் அவர் நடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. ஒருவேளை என் மகள் அன்ஷுகா மாலிகா இந்தியா திரும்பியவுடன் சினிமாவில் நடிக்க விரும்பினால், அதன் பிறகு யாருடன் ஜோடியாக நடிப்பது என அப்போது முடிவு செய்யப்படும். ஆனால் இதுவரை அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Roja and director RK Selvamani are married and living together. Their daughter's photo was morphed and published on social media. Actress Roja has expressed grief over this.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X