Don't Miss!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..காவடி எடுத்த ரோஜா..எல்லமே அதுக்காகத்தான்!
சென்னை : நடிகை ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று தனது குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி கொடுத்து அங்கேயும் பட்டையை கிளப்பி வருகிறார் ரோஜா.
ரஜினிக்கு
கிடைப்பது
ஏன்
கமலுக்கு
மட்டும்
கிடைக்க
மாட்டேங்குது...ஆதங்கத்தை
கொட்டும்
ரசிகர்கள்

நடிகை ரோஜா
1992ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான செம்பருத்தி படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார் ரோஜா. வெள்ளை நாயகிகள் தமிழ் சினிமாவில் படையெடுத்து வந்த அந்த காலத்தில் தனக்கே உரிய மாநிறத்துடன் திரையில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்
சரத்குமாருடன் சூரியன், ரஜினிகாந்துடன் உழைப்பாளி போன்ற திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி செய்து கொண்டார் . அவர்களுக்கு அன்சுமாலிகா, கிருஷ்ணா லோஹித் என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருகிறார். குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருந்து வரும் நடிகை ரோஜா அரசியலிலும் கலக்கி வருகின்றார்.

காவடி எடுத்த ரோஜா
இந்த நிலையில் ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று தனது குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். அக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வந்திருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக காவடி எடுத்தபடி நடந்து வந்திருந்தார் நடிகை ரோஜா. அதுமட்டுமன்றி தனது வேண்டுதலையும் சிறப்பாக நிறைவேற்றினார்.

நல்லட்சி தொடரவேண்டும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, தான் திருத்தணி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து வருவதாகவும், தனது தொகுதி மக்களுக்காகவும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடக்கவும் முருகன் அருள் புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.