»   »  நடிகை லட்சுமியின் தாயார் மரணம்

நடிகை லட்சுமியின் தாயார் மரணம்

Subscribe to Oneindia Tamil


நடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் மரணமடைந்தார்.

டி.ஆர்.மகாலிங்கம் நடிக்க, ஏவி.எம்.தயாரிப்பில் உருவான ஸ்ரீவள்ளி படம் மூலம் நடிகையானவர் ருக்மணி.

இதையடுத்து லவங்கி, முல்லைவன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கப்பலோட்டிய தமிழ் படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.

ருக்மணியின் கணவர் ஒய்.வி.ராவும் ஒரு பிரபல நடிகர். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஜோடியாக சாவித்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தை இயக்கினார். இப்படத்தில் ருக்மணியும் நடித்தார். இதில் நடித்தபோதுதான் ராவுக்கும், ருக்மணிக்கும் காதல் மலர்ந்து மணமுடித்துக் கொண்டனர்.

81 வயதான ருக்மணிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லை. சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.

ருக்மணியின் உடல் தகனம் இன்று காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடந்தது.

Read more about: rukmani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil