குழந்தை பெற திட்டமிட்டுள்ள சமந்தா - நாக சைதன்யா... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரம்!
சென்னை: நடிகை சமந்தாவும் - நாக சைதன்யாவும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.
நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்ததுதான் குடும்பத்தில் பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது.

விசேஷங்களை புறக்கணிக்கும் சமந்தா
நாக சைதன்யா குடும்பத்தினர் சினிமாவில் இருந்து ஒதுங்குமாறு கூறியும் அதனை கேட்க மறுத்த சமந்தா, தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதால் அவர் மீது குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே குடும்பத்தில் நடைபெறும் பல விசேஷங்களை நடிகை சமந்தா புறக்கணித்து வந்தார்.

சக்ஸஸ் பார்ட்டியில் பங்கேற்கவில்லை
நாகார்ஜூனா பிறந்த நாள் விழா, ஆமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளில் சமந்தா பங்கேற்க வில்லை. இதேபோல் நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படத்தின் சக்ஸஸ் பார்ட்டியிலும் சமந்தா பங்கேற்கவில்லை.

நீதிமன்றத்தை நாட முடிவு
இதனால் குடும்பத்தில் பிரச்சனை முற்றி விட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகும் விவாகரத்து குறித்த தகவல்களால் தான் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாகவும் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா.

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம்
இந்நிலையில் நடிகை சமந்தா முழு நேர குடும்பப் பணியில் ஈடுபட போவதாகவும் நாக சைதன்யாவும் சமந்தாவும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே ஆஃப் லைனிலும் ஆன் லைனிலும் நடிகை சமந்தா மீடியாவை புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹைத்ராபாத்தை விட்டு போகவில்லை
மேலும் நடிகை சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகததற்கு காரணமும் அதுதான் என்று கூறப்படுகிறது. மும்பையில் குடியேற போவதாக வெளியான தகவலை மறுத்த நடிகை சமந்தா தான் ஹைத்ராபாத்தை விட்டு எங்கும் போகவில்லை என்றும் நடிகை சமந்தா அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
சமந்தா அடுத்து 'சகுந்தலம்' படத்தில் நடிக்கிறார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புராண நாடகமாக கூறப்படும் இந்த படத்தை குண சேகர் இயக்கியுள்ளார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











