முன்னாள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத பிரபல நடிகை... அப்செட்டில் ரசிகாஸ்!
சென்னை: நாக சைதன்யாவின் பிறந்தநாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறாததால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா தற்போது பாலிவுட்டிலும் முயற்சி செய்து வருகிறார்.
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுடன் பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

விவாகரத்து அறிவிப்பு
இதனை தொடர்ந்து 7 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் தங்களின் திருமண பந்தம் முறிவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.

நாக சைதன்யா பிறந்தநாள்
இதனால் திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இருவரும் தங்களின் வேலைகளில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா நவம்பர் 24ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் பங்கர்ராஜு படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியது. இந்நிலையில் நடிகையும் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியுமான சமந்தா பிறந்த நாள் வாழ்த்து கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கெஞ்சும் ரசிகர்கள்
ஆனால் நடிகை சமந்தா நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுங்கள் சம்மு என கெஞ்சி வருகின்றனர். இன்னும் பலர் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும் தோழியாக வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல்
நடிகை சமந்தா தற்போது கோவாவில் நடைபெறும் விருது விழாவில் பங்கேற்றுள்ளார். விருது விழாவில் அவர் பங்கேற்றிருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











