»   »  சமந்தா- நாக சைதன்யாவிற்கு விரைவில் நிச்சயதார்த்தம்?

சமந்தா- நாக சைதன்யாவிற்கு விரைவில் நிச்சயதார்த்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சமந்தா- நாக சைதன்யா நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாகர்ஜுனாவின் மூத்த மகனும், தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவருமான நாக சைதன்யாவும், முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

Actress Samantha Naga Chaitanya Engagement

இவர்கள் காதலை உறுதிப்படுத்துவது போல இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வலம்வந்தன.

தொடர்ந்து நாக சைதன்யாவின் அம்மாவை சமந்தா நேரில் சென்று சந்தித்ததாகவும், விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

கடந்த வாரம் நாக சைதன்யா வீட்டில் சமந்தா இருப்பது போன்ற சிறு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இதனால் வெகு விரைவில் இவர்கள் நிச்சயதார்த்தத்தை நடத்திட இரு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்துள்ளனராம்.

நாக சைதன்யா தற்போது 'பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரின் நிச்சயதார்த்தமும் நடைபெறும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து நடிப்பாரா? இல்லை சினிமாவிற்கு முழுக்குப் போடுவாரா என்பது தெரியவில்லை.

English summary
Sources Said Samantha- Naga Chaitanya Engagement Details Revealed Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil