எப்போதும் உங்களை நம்புகிறேன்... அல்லு அர்ஜூனின் பேச்சை கேட்டு நெகிழ்ந்து போன சம்மு!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூனின் பேச்சை கேட்டு நெகிழ்ந்து போன நடிகை சமந்தா நான் எப்போதும் உங்களை நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். சமீபத்தில் இவரது நடிப்பில் புஷ்பா படம் வெளியானது.

சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. இதன் அண்மையில் வெளியான முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஒரு பாடலுக்கு நடனம்

ஒரு பாடலுக்கு நடனம்

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

சர்ச்சையான பாடல்

சர்ச்சையான பாடல்

தெலுங்கில் ஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாமா என்றும் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் ஆண்களை தவறாக சித்தரிப்பதாக கூறி இப்பாடலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிப்புகள் எழுந்தன.

தேங்க் யூ மீட்

தேங்க் யூ மீட்

இருப்பினும் இந்தப் பாடல் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. வெளியான சொற்ப நாட்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் பெற்றது இப்பாடல். இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மற்றும் தேங்க் யூ மீட்டில் பேசிய அல்லு அர்ஜூன், சமந்தாவுக்கு நன்றி கூறி பேசினார்.

இது சரியா தவறா?

இது சரியா தவறா?

என் மீது நம்பிக்கை வைத்து இந்த ஒரு பாடலுக்கு ஆடினீர்கள். செட்டில் உங்களுக்கு எவ்வளவு சந்தேகம் வந்தது என்று எனக்கு தெரியும். இது சரியா தவறா? என பல சந்தேகங்கள் உங்களுக்கு வந்தது. நான் சொன்ன ஒரே வார்த்தை என்னை நம்பி இதை செய்யுங்கள் என்றேன்.

 இதயத்தை வென்று விட்டீர்கள்

இதயத்தை வென்று விட்டீர்கள்

அதன்பிறகு ஒரு கேள்வி கூட என்னை கேட்கவில்லை. எங்களை நம்பினீர்கள் அதற்கு உங்களுக்கு பெரிய நன்றி. என் வார்த்தை நம்பி என் இதயத்தையும் என் மரியாதையையும் வென்று விட்டீர்கள். யூட்யூப்பில் உலக அளவில் நம்பர் ஒன் பாடலாக இந்த பாடல் இருப்பதற்கு உங்களுக்கு வாழ்த்துகள். நன்றி சாம் என்று பேசியிருந்தார்.

ஹார்ட்டின் அனுப்பிய அல்லு

ஹார்ட்டின் அனுப்பிய அல்லு

இந்நிலையில் அல்லு அர்ஜூன் பேசிய இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை சமந்தா, இப்போதும் எப்போதும் நான் உங்களை நம்புவேன் அல்லு அர்ஜூன் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த அல்லு அர்ஜூன் அவருக்கு ஹார்ட்டினை பதிலாக பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X