நயன்தாரா, விக்கி திருமணம்.. சமந்தா கலந்து கொள்ளமாட்டார்.. காரணம் இதுதானாம்!

சென்னை : அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் சமந்தா கொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை ஜூன் 09 ந் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இருவரும் அளித்துள்ளனர்.

நயன்தாரா

நயன்தாரா

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப் போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக நயன்தாரா அறிவித்து இருந்தார். இதையடுத்து இவர்களின் திருமண தேதியை ரசிகர்கள் ஆவோடு எதிர்பார்த்து காத்திருந்தார். இதையடுத்து நாளை இவர்களது திருமணம் கோலாகலமாக மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது.

விவிஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு

விவிஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு

இந்த திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், நயன்தாராவின் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

சமந்தா தற்போது, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால், நயன்தாரா திருமணத்தில் சமந்தா கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின் போது சமந்தாவும் நயன்தாராவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக சமந்தா மிகவும் ஆர்வமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்யூரிட்டி கோடு

செக்யூரிட்டி கோடு

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு செக்யூரிட்டி கோடு அழைப்பிதழுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் வெரிஃபிகேசனுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இதில் பங்கேற்கும் அனைவரும் அணிந்த வர வேண்டிய உடை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X