»   »  ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை: அலறியும் உதவ ஆளில்லை

ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை: அலறியும் உதவ ஆளில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை

திருவனந்தபுரம்: ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கன்னியாகுமரிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் சனுஷா(23). அவர் நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார்.

ஏசி பெட்டியில் அப்பர் பெர்தில் இரவில் தூங்கியுள்ளார்.

சனுஷா

சனுஷா

இரவு 1.10 மணி அளவில் தனது முகத்தில் ஏதோ நகர்வது போன்று உணர்ந்து திடுக்கிட்டு கண்ணை விழித்துப் பார்த்துள்ளார். அப்போது ஒருவர் சனுஷாவின் உதடுகளை தனது கையால் தடிவிக் கொண்டிருந்திருக்கிறார்.

அலறல்

அலறல்

ஒருவன் தன் உதடுகளை தடவுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சனுஷா உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் யாருமே அவருக்கு உதவிக்கு வரவில்லை. கண்களை மூடி தூங்குவது போன்று நடித்துள்ளனர்.

உன்னி

உன்னி

அடுத்த கம்பார்ட்மென்ட்டில் இருந்த திரைக்கதை எழுதும் உன்னி மற்றும் ரஞ்சித் என்ற பயணி மட்டும் உதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் சென்று டிடிஆரை அழைத்து வந்து நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளனர்.

கைது

கைது

டிடிஆர் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு போன் செய்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே அந்த நபர் தப்பிச் செல்லாமல் பார்த்துள்ளார் சனுஷா. அரை மணிநேரத்தில் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணை

விசாரணை

சனுஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்டோ போஸ்(40) என்பதும், அவர் தங்க நகைகள் தயாரிப்பவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

துணிச்சல்

துணிச்சல்

உதவி கேட்டு கதறுகிறேன் ஒருத்தரும் கண்டுகொள்ளவே இல்லை. யாரும் உதவிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை பாலியல் தொல்லை கொடுத்தவனை சும்மாவிடக் கூடாது என்று முடிவு செய்தேன். அவன் கையை பிடித்து முறுக்கிவிட்டேன் என சனுஷா தெரிவித்துள்ளார்.

English summary
40-year-old man from Kanyakumari was arrested for molesting actress Sanusha who was travelling in an AC compartment in Maveli Express on thursday. Sanusha found him touching her lips while she was asleep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil