பிரைன் ட்யூமர்.. கொரோனா.. செயற்கை சுவாசம்.. கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி!

சென்னை: பிரபல நடிகையான சரண்யா சசி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகை சரண்யா சசி. மலையாள டிவி சீரியல் நடிகையாக 2006ஆம் ஆண்டு பாலச்சந்திரா மேனன் சீரியல் மூலம் அறிமுகமானார் சரண்யா சசி.

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ளார். சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரைன் ட்யூமர்

பிரைன் ட்யூமர்

தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சரண்யா சசியின் மார்க்கெட் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் அவருக்கு பிரைன் ட்யூமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நடிகர் நடிகைகள் உதவி

நடிகர் நடிகைகள் உதவி

இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகின்றனர்.

மோசமடைந்த உடல்நிலை

மோசமடைந்த உடல்நிலை

அவருடைய 11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படுத்த படுக்கையாக இருந்து வருகிறார் சரண்யா சசி. சரண்யா சசிக்கு அவரது தோழியான மலையாள நடிகை ஸீமா நாயர் உதவி செய்து வருகிறார்.

உடனடியாக செய்ய முடியாது

உடனடியாக செய்ய முடியாது

அவருடைய தண்டுவடத்திலும் நோய் பரவியதால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. தண்டுவடத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இதனைதொடர்ந்து கடந்த மாதம் 3ஆம் தேதி சரண்யா சசிக்கு கீமோ தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 23ஆம் தேதி சரண்யாவின் தாயாருக்கும் சகோதரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கவலைக்கிடமான நிலையில்

கவலைக்கிடமான நிலையில்

இந்நிலையில் சரண்யா சசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸீமா நாயர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சோகத்தில் மலையாள சினிமா

சோகத்தில் மலையாள சினிமா

மேலும் திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஸீமா நாயர் தெரிவித்துள்ளார். சரண்யா சசி குறித்து ஸீமா நாயர் தெரிவித்துள்ள இந்த தகவல் மலையாள திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: saranya sasi covid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X