»   »  சுற்றுலா சென்ற இடத்தில் நடிகையிடம் ரூ. 60,000 கொள்ளை

சுற்றுலா சென்ற இடத்தில் நடிகையிடம் ரூ. 60,000 கொள்ளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்தான்புல்: இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சவும்யா டான்டனிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இஸ்தான்புல்லில் திருடப்பட்டுள்ளது.

பாபி ஜி கர் பர் ஹை இந்தி தொலைக்காட்சி தொடரில் அனிதா பாபியாக நடித்து வருபவர் சவும்யா டான்டன். அவர் கடந்த வாரம் துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.


இன்ப சுற்றுலா துன்ப சுற்றுலாவாகிவிட்டது.


டாக்சி

டாக்சி

இஸ்தான்புல்லில் சவும்யா டாக்சியில் தனியாக சென்றுள்ளார். டாக்சி டிரைவர் மீட்டர் போடாமல் வண்டியை ஓட்டியுள்ளார். திடீர் என்று வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சவுமியாவிடம் பணம் கேட்டுள்ளார்.


யூரோ

யூரோ

சவுமியா தனது பர்ஸை எடுத்து யூரோ பணத்தை அளிக்க டிரைவரோ துருக்கி நாட்டு பணமான லிரா தான் செல்லும் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் துருக்கியில் யூரோ செல்லும்.


கூச்சல்

கூச்சல்

சவுமியா பர்ஸை எடுத்து பணம் எடுத்தபோது டாக்சி டிரைவர் திடீர் என்று கூச்சலிட்டதால் அவர் பயந்துள்ளார். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி டிரைவர் சவுமியாவின் பர்ஸில் இருந்து ரூ. 60 ஆயிரத்தை திருடிவிட்டார்.


போலீஸ்

போலீஸ்

பயணச் சீட்டு இல்லாததால் போலீசாரால் அந்த டாக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் சவுமியா அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறராவது சூதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


English summary
Hindi television serial actor Saumya Tandon has been robbed of Rs. 60,000 in Istanbul where she went to enjoy her vacation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil