இசையார்வம் என்னுள் மீண்டும் துளிர் விட்டது… ஹார்மோனியம் வாசித்து அசத்திய சாயிஷா !
சென்னை : நடிகர் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா சிறுவயதிலிருந்தே பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது என ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
காப்பான் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைப்படத்தில் சாயிஷா நடித்திருக்க கன்னடத்திலும் ஒரு படம் வெளியாக உள்ளது.
நடிப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் திறமை வாய்ந்த நடிகை சாயிஷா சில காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு உள்ள நிலையில் ரசிகர்கள் இவரை பழைய ஃபார்முக்கு வரக் கேட்டுக் கொண்டு வரும் நிலையில் இப்பொழுது பாடல் பாடி அசத்தியுள்ளார் வீடியோ ஒன்று ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளுகிறது.

வனமகன்
இது என்ன மாயம்,கிரீடம், தலைவா, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சாயிஷா.

காதலித்து திருமணம்
வனமகன் திரைப்படத்தில் வரும் பாடல்களில் வளைந்து நெளிந்து ஆடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் முதல் திரைப்படத்திலேயே இடம்பிடித்த சாயிஷாவி்ன் நடனத்திற்காக ஏங்கி போன ரசிகர்கள் இங்கு பல கோடி உள்ளனர். இதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம்,ஜூங்கா ஆகிய திரைப்படங்களில் துடிப்பான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த சாயிஷா கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டதைத்தொடர்ந்து சூர்யாவின் காப்பான் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்த ஆர்யா மற்றும் சாயிஷா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் டெடி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது ஆனால் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பாடுவதில் ஆர்வம் அதிகம்
சாயிஷாவின் நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்கிற நிலையில் இப்பொழுது தான் பாடுவதிலும் சலைத்தவர் அல்ல என்பதை வீடியோவின் மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஹார்மோனிய பெட்டியில் வசித்து ஸ்வரங்களை அச்சுப் பிசகாமல் பாடியவாறு.. ஐந்து வயதிலேயே பாடக் கற்றுக் கொண்டேன், பாடுவதில் எனக்கு ஆர்வம் மிகவும் அதிகம் அது பலருக்கும் தெரியாது, ஆனால் சமீபத்தில் வெளியான மாறா திரைப்படத்தை பார்த்து இசையார்வம் மீண்டும் என்னுள் துளிர் விட்டுள்ளது என சாயிஷா வெளியிட்டுள்ள வீடியோ இப்பொழுது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











