பாருங்க நான் நல்லாதான் இருக்கேன்… அது வதந்தி… யாரும் நம்பாதீங்க… ஷகிலா வீடியோவில் விளக்கம் !

சென்னை : நடிகை ஷகிலா தனது உடல் நலம் குறித்து பரவி வரும் பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடனும் இருக்கிறேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

யாரோ ஒருவர் பரப்பிய கெட்ட செய்தியால், எனக்கு நிறைய அழைப்புகளும் அன்பும் கிடைத்துள்ளது என்றார்.

ப்ளே கேர்ள்ஸ்

ப்ளே கேர்ள்ஸ்

மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்றார்.

கொடிகட்டிப் பறந்தார்

கொடிகட்டிப் பறந்தார்

90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிம் கொடிகட்டிப் பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இதனால் பிரபல கதாநாயகர்களின் படங்கள் வெளியாவது பெரும் சவாலாக இருந்தது.

குணசித்திர நடிகை

குணசித்திர நடிகை

மலையாள படம் என்றால அது ஷகிலா படம் தான் என்று பேசப்பட்ட ஷகிலா. கிட்டத்தட்ட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் ஷகிலா நடித்துள்ளார்.

Recommended Video

Shakeela மீது படுத்து தூங்கிய Manimegalai | Cook With Comali
கண்டோட்டம் மாறியது

கண்டோட்டம் மாறியது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான கண்ணோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அவரை அன்போடு அம்மா என்றுஅழைத்து வந்தனர். இதுவரை ஆண்கள் மட்டுமே ரசிகர்களாக இருந்த நிலையில் தற்போது பெண்களும் இவரது ரசிகைகளாக மாறி உள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், ஷகிலாவின் உடல் நலம் குறித்து செய்திகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவின இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, விளக்கம் அளித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வதந்தி பரப்பியவருக்கு நன்றி

சமூகவலைத்தளத்தில் என்னை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது. நான் மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடனும் இருக்கிறேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். பலரும் என்னை தொலைபேசியில் அழைத்து அன்பாக நலம் விசாரித்தார்கள். இந்த வதந்தியால் ரசிகர்களின் அன்பை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை தெரிந்து கொள்ள வைத்த வதந்தி பரப்பியவர்களுக்கு எனது நன்றி என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷகிலா வளர்ப்பு மகள் மிளா

ஷகிலா வளர்ப்பு மகள் மிளா

நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகள் மிளாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரும் தனது மகளை அறிமுகப்படுத்தினார். மேலும் , மிளா இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கை இல்லை என்றும், எனக்கு துணையாக இருப்பவர் மிளா என்றும் கூறியிருந்தார். மிளா ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலாகவும் உள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X