அழகை வெளிச்சம் போட்டு காட்டி… ஃபாலோவர்ஸை அதிகரிக்கும் ஷாலு ஷம்மு!
சென்னை : இணையத்தை கலக்கும் கவர்ச்சி புயல் யார் என்றால் அது நம்ம ஷாலு ஷம்முதான்.
கவர்ச்சியால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் இவர்.
ஓரிரு படங்களில் மட்டும் தலைக்காட்டிய ஷாலு ஷம்மு, பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன என்பது போல எப்போதும் போட்டோஷூட்டில் படு பிஸியாகவே இருக்கிறார்.

சூரியுடன்
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக
அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
Recommended Video

சிறு வேடத்தில்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயமே2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஃபாலோவர்ஸ்சை அதிகரிக்க
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஷாலு ஷம்மு நடித்திருந்தாலும், எப்போதும் போட்டோஷூட்டில் பிஸியாகவே இருக்கிறார். இணையத்தில் கவர்ச்சி புயலாக வரும் ஷாலு ஃபாலோவர்ஸ்சை கவர இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகிறார். தற்போது, இவர் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோவில், கோட் ஷூட் பூட்டுடன் அல்ட்ரா மாடர்ன் கேள் லுக்கில் மின் விளக்குகளுக்கு நடுவே கைகளை தூக்கி, தனது மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











