பொன்னியின் செல்வன் நிலை என்ன... ரகசியத்தை வெளியிட்ட நடிகை
சென்னை : கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி ஐந்து பாகங்களாக வெளிவந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்க வேண்டும் என்பது பல டைரக்டர்களின் கனவாக இருந்து வந்தது. இந்த கனவை நனவாக்கும் முயற்சியிங் இறங்கினார் டைரக்டர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுத்து வருகிறார். 2022 ம் ஆண்டு ஆரம்பத்தில் படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதல் பாகம் கோடை ரிலீஸ்
படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பை, நீண்ட வாளுடனான போஸ்டருடன் வெளியிட்டனர் பட தயாரிப்பாளர்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதையும் வாள் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

என்ன நிலையில் உள்ளது
இதனால் பொன்னியின் செல்வன் படம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தில் நடித்த நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, பிஸியாக நடித்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் பொன்னியின் செல்வன் கெட்அப்பையும் மாற்றி, தங்களின் வழக்கமான தோற்றத்திற்கு மாறி வருகிறார்கள்.

ஸ்டேட்டசை பகிர்ந்த நடிகை
லேட்டஸ்ட் தகவலாக நடன கலைஞர் வித்யா சுப்ரமணியன், பொன்னியின் செல்வனின் வேலைகள் எந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இவரும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதல் முறையாக டப்பிங்கை முடித்து விட்டு திரும்பி உள்ளேன். படத்தில் நடித்த போது பதற்றமாக இருந்தது. இப்போது அனைத்தையும் முடித்த உடன் தான் இயல்பாகி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரோலில் இவரா
ஃபோட்டோவுடன் வித்யா சுப்ரமணியம் வெளியிட்ட இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகிறார்கள். முதல் முறையாக படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்றும் பலர் கேட்டு வருகிறார்கள். சிலர், வனவன் மாதேவி ரோலில் தான் வித்யா நடித்துள்ளதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விரைவில் ஃபஸ்ட்லுக் வருமா
இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதும், பல நடிகர் - நடிகைகள் டப்பிங் வேலைகளை முடித்து விட்டதும் தெளிவாக தெரிகிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதால், விரைவில் படத்தின் டீசர், ஃபஸ்ட்லுக் போன்றவைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











