சண்டை காட்சிகளில் கலக்கும்.. யாஞ்சி பாடல் நாயகி.. வைரலாகும் போட்டோஸ் !

சென்னை : விஷாலின் சக்ரா திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சண்டை காட்சிகளில் கலக்கி வருகிறார்.

Recommended Video

Chennai 28 unexpected ReUnion | Simbhu Upcoming Movie | Pa. Ranjith Tweet

கோகினுர் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது.

Actress Shraddha Srinath fights in Chakra

பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா, பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அவ்வருடத்தின் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

இப்படத்தில் வரும் யாஞ்சி யாஞ்சி பாடல் அனைவரின் மொபைல் ரிங்டோன் ஆக இருந்தது. இப்பாடலில் குயூட் ஆக நடித்து இருப்பார் ஷ்ரத்தா. பின் அதே வருடத்தில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார், அதன் பின் தெலுங்கில் நானி நடித்த ஜர்சி படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார், இப்படம் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று தந்தது.

Actress Shraddha Srinath fights in Chakra

பின் தமிழில் அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் இப்படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் ஆக அமைந்தது. மேலும், இப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷால் நடித்து வரும் சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இவருடன் ரெஜினாவும் நடிக்கின்றார் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார் எம். எஸ். ஆனந்தன் இயக்குகிறார்.

Actress Shraddha Srinath fights in Chakra

தற்போது படத்தின் ஷூட்டிங்கில் ஒரு சண்டை காட்சியை படமாக எடுத்து வருகின்றனர் அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருக்கும் புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்தும் படத்தில் ஷ்ரத்தாவும் சண்டை இடுகிறார் என்று பலரால் எண்ணப்படுகிறது. படம் வந்ததும் என்னவ்வென்று தெரிய வரும். படம் வரும் சம்மர் அல்லது ஜீன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X