சூப்பர் மார்க்கெட்டில் இப்படியா.. காதலனை கண்டபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஸ்ருதிஹாசன்!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் பொதுவெளியில் தனது காதலரை கண்டபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் ஸ்ருதி.

தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் பிரபாஸுடன் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

காதலருடன் போட்டோ

காதலருடன் போட்டோ

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய காதலருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது. பலரும் அந்த போட்டோவை பார்த்து ஸ்ருதிஹாசனை விளாசி வருகின்றனர்.

முறிந்த முதல் காதல்

முறிந்த முதல் காதல்

நடிகை ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

தொடர முடியவில்லை

தொடர முடியவில்லை

அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

நெருக்கமாக இருக்கும் போட்டோஸ்

நெருக்கமாக இருக்கும் போட்டோஸ்

தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசனும் தெரிவித்திருந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் போட்டோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

காதலனை கட்டிப்பிடித்து

காதலனை கட்டிப்பிடித்து

அதாவது மும்பையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது காதலனுடன் சென்றுள்ளார் ஸ்ருதி ஹாசன். அங்கு ஒரு காலை தூக்கியப்படி தனது காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் ஸ்ருதி.

பொது வெளியில் இப்படியா?

பொது வெளியில் இப்படியா?

ஸ்ருதியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் காதலர் என்றாலும் பலர் கூடும் பொது வெளியில் இப்படியா என்று விளாசி வருகின்றனர். இன்னும் சிலர் இருவரின் போட்டோக்களையும் பார்த்து க்யூட் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X