Don't Miss!
- News
ஜல்லிக்கட்டு போட்டி.. மாடு முட்டி சிறுவன் பலி.. பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி- அன்புமணி ராமதாஸ்
- Finance
தூள் கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. நிகர லாபம் ரூ.8,312 கோடியாக அதிகரிப்பு..!
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஸ்ருதி ஹாசனுடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த காதலர்!
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவர் நீண்ட நாட்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஸ்டைலாக
புத்தகம்
படிக்கும்
ஹன்சிகா...
புத்தகத்தைப்
புரட்டும்
பதுமையே
என
வர்ணிக்கும்
ரசிகர்கள்!

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பாவின் பேக்கிரவுண்டை மையமாக கொணடு திரைத்துறையில் நுழைந்தாலும் தொடர்ந்து தன்னுடைய உழைப்பு மற்றும் திறமை பயன்படுத்தி தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பு மற்றும் பின்னணி குரல் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

திறந்த புத்தகம்
தன்னுடைய வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்துள்ளார் ஸ்ருதிஹாசன், மதுவிற்கு அடிமையாக ஆன இவர், இடையில் சிறிது காலம் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டுள்ள இவர், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தான் மதுவிற்கு அடிமையாக ஆனதை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள்
இவர் பிரபாசுடன் இணைந்து நடித்துள்ள சலார் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே பாலகிருஷ்ணாவின் புதிய படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். இது தவிர்த்து இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நீண்ட காலமாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இணைந்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகிறார்.

விரைவில் திருமணம்?
இதனிடையே இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சாந்தனு கூறுகையில், தாங்கள் தற்போது தான் தங்களது டேட்டிங்கை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் நடிப்பு இல்லாமல் இசைதான் தங்களை ஒருங்கிணைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரியரை நோக்கிய பயணம்
மேலும் இசை மற்றும் ஆடை வடிவமைப்பில் இருவரும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவருக்கொருவர் மற்றவர்களை ஊக்கப்படுத்தி தங்களது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் திருமணம் குறித்து யோசிக்க நேரமில்லாமல் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனம்திறந்த சாந்தனு
ஸ்ருதி மற்றும் சாந்தனு இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வரும் நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது சாந்தனுவின் இந்த பதில் அவர்கள் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது.