முரட்டுத்தனமான குத்தால இருக்கு... என்னபரம்பரைனு தெரியலையே… ஸ்ருதியை கலாய்த்த நெட்டிசன்ஸ் !

சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் முரட்டுத்தனமாக பாக்ஸிக் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இது என்ன பரம்பரைனு தெரியலையே என்று ஸ்ருதியை கலாய்த்து வருகின்றனர்.

இணையத்தில் வெளியான இந்த வீடியோவை ஸ்ருதியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தேவர்மகன் படத்தில்

தேவர்மகன் படத்தில்

நடிப்பு, இசை, பாடகி, நடனம் என அனைத்திலும் சிறந்தவராக விளக்குகிறார் ஸ்ருதி ஹாசன். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை தனது குழந்தை பருவத்திலேயே நிரூபித்தார். தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தை தொடங்கிய ஸ்ருதி அப்படத்தில் போற்றிப்பாடடி பொண்ணே என்ற பாடலை தனது மழலையான குரலில் பாடினார். மேலும் ஹே ராம் படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நடித்து, அந்த படத்திலும் பாடி உள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படித்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றார் ஸ்ருதி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

காதலில் மூழ்கடித்தார்

காதலில் மூழ்கடித்தார்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பள்ளிப்பருவ மாணவியாகவும், திருமணமான பருவப்பெண்ணாகவும் எதார்த்தமாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் காதலின் அடுத்த எல்லையை உணர்ந்தும் திரைப்படமாக அமைந்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலந்து கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்ததால் வெற்றி நாயகி என பெயர் எடுத்துள்ளார்.

ஸ்ருதியின் காதலர்

ஸ்ருதியின் காதலர்

நடிகை ஸ்ருதி ஹாசன் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனுவை பிறந்த நாளில் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் லிவ்விங் டூ கேதர் ரிலேஷன்ரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

வயிற்றியில் எழுதிய சாந்தனு

சமீபத்தில் கூட ஸ்ருதி ஹாசன் தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில், சாந்தனு Thug Life என்று எழுதிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலர், எழுதுற இடமா அது என்றும், வேறு இடம் கிடைக்கலயா என்று அந்த வீடியோவை வைரலாக்கினர்.

இது என்ன பரம்பரை

தற்போது ஸ்ருதிஹாசன் முரட்டுத்தனமாக பாக்ஸிக் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில், ஸ்ருதி கையில க்ளவுசுடன் ஆக்ரோஷமாக கத்திக்கு பயிற்சியாளரை குத்துகிறார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வரும் நிலையில், பல நெட்டிசன்கள் சார்பட்ட பரம்பரை படம் பார்த்ததன் விளைவோ என்றும், இது என்ன பரம்பரை என்று தெரியவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

லாபம் படத்தில்

லாபம் படத்தில்

தெலுங்கில் வக்கீல் சாப் திரைப்படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும், பிரபாசுடன் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X