சில்மிஷம்.. கேரள காங். எம்.பி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்

By Sudha

கொல்லம்: கேரளாவைச் சேர்ந்த 73 வயதான காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு தன்னிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனன் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார். பீதாம்பர குருப்பு மீது கொடுத்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.

ஸ்வேதாவின் புகாரின்பேரில் குருப்பு மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஸ்வேதா.

முன்னதாக, குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், இந்த முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

மன்னிப்பு கேட்டு விட்டார்

மன்னிப்பு கேட்டு விட்டார்

பீதாம்பர குருப்பு பகிரங்கமாகவும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

வழக்கைத் திரும்பப் பெறுகிறேன்

வழக்கைத் திரும்பப் பெறுகிறேன்

எனவே அவருக்கு எதிரான அத்தனை சட்டரீதியான நடவடிக்கைகளையும் நான் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.

மேனனிடமிருந்து வரவில்லை- போலீஸ்

மேனனிடமிருந்து வரவில்லை- போலீஸ்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, மேனனிடமிருந்து அப்படி எந்த அறிக்கையும், கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றனர். ஆனால், இன்று காலை புகாரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்வேதாவின் கணவர் கூறியுள்ளார்.

படகுப் போட்டியின்போது

படகுப் போட்டியின்போது

கொல்லத்தில் நவம்பர் 1ம் தேதி நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்வேதாவிடம் கையை உரசியம், தொட்டும் சில்மிஷம் செய்தார் குருப்பு என்பது ஸ்வேதாவின் புகார். அதன் பேரில் போலீஸார் நேற்று வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.

புகார் வாபஸ்

புகார் வாபஸ்

இந்த நிலையில் கொல்லம் காவல் நிலையத்தில் ஸ்வேதா மேனன் கொடுத்திருந்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X