Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 60வது பிறந்த நாள் !
சென்னை: தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னி, காந்த கண்ணழகி சில்க் ஸ்மித்தாவிற்கு இன்று 60வது பிறந்தநாள்.
சில்க் ஸ்மித்தா 80,90 களில் மட்டுமின்றி இன்றளவும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழ் சினிமாவின் ரசிகர்களிடத்தில் அவர் விட்டு சென்ற இடத்தை இன்னும் எந்த நடிகையும் பிடிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ரியல் சென்சேஷனல் ஆஃப் சவுத் இந்தியா
நடிகை சில்க் ஸ்மித்தாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. இயக்குனர் வினு சக்கரவர்த்தி அவரின் படத்தில் விஜயலக்ஷ்மியை ஸ்மித்தாவாக அறிமுகம் செய்தார். பின்னர், வண்டிச்சக்கரம் என்னும் படத்தில் சில்க் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அது பிரபலமடைய சில்க் ஸ்மித்தா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 17 வருடங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரியல் சென்சேஷனல் ஆஃப் சவுத் இந்தியாவாக திகழ்ந்தார் சில்க் ஸ்மிதா.

நடிகர்களுக்கு இணையான சம்பளம்
நடிகை சில்க் ஸ்மித்தா நடித்த பெரும்பாலான படங்களில் இயக்குனர்கள் அவருக்கென ஒரு தனி கதாபாத்திரத்தையும், பாடலையும் தேடி தேடி வைத்தனர். அது மட்டுமின்றி அந்த காலத்திலேயே நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய நடிகை சில்க் ஸ்மிதா ஒருவரே ஆவார். அந்த அளவுக்கு அவருடைய ரசிகர் பட்டாளம் பரந்து இருந்தது.

வழிமாறிய சில்க்
தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களிலேயே மிக பெரிய இடத்தை பிடித்த சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை தற்கொலையில் (என்று சொல்லப்படுகிறது) முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தா என்னும் சகாப்தத்தின் முடிவு இவ்வாறு முடிவடைந்தது இன்றளவும் ரசிகர்களிடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

நினைவுகூர்வதில் பெருமை
நடிகை சில்க் ஸ்மித்தாவின் சினிமா வாழ்க்கையில் சிறந்து விளங்கியது மட்டுமன்றி அவருடைய நிஜ வாழ்விலும் அவரை நாடி வந்தோருக்கு பல உதவிகளை செய்துள்ளார். அவரது 60வதுபிறந்த நாளை 80ஸ் 90ஸ் ரசிகர்கள் மட்டும் இன்று இன்றைய இளசுகளும் வாட்ஸ்அப் ஸ்டேடசாக வைத்தும், காமன் டிபியை வைத்தும் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். பேரழகி,கவர்ச்சி என்ற ஆயுததால் அனைவரையும் கட்டிப்போட்ட தென்னாட்டு தேவதையின் 60வது பிறந்தநாளை நினைவு கூறுவதில் FilmiBeat tamil பெருமை கொள்கிறது.