Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தனுஷ் எனக்கு ஆறுதலாக இருந்தார்.. மனம் திறந்த சோனியா அகர்வால்!
சென்னை : தனுஷ் பல நேரங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தார் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகை சோனியா அகர்வாலுக்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. திரைத்துறையில் நுழைந்த சிறிது காலத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு என பல பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கேஜிஎஃப்.,கே
டஃப்
கொடுக்க
போறாங்களாமே...கோலிவுட்டின்
பிரசாந்த்
நீல்
இவரா?
அப்போ
யாஷ்
யாரு?

சோனியா அகர்வால்
நடிகை சோனியா அகர்வால் தற்போது திகிலூட்டும் பேய்ப் படமாக உருவாகியுள்ள 'கிராண்மா' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஷிஜின்லால் என்பவர் இயக்கியுள்ளார். ஜி.எம்.ஏ.பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜெயின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

காதல் கொண்டேன்
இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால் அளித்துள்ள நேர்காணலில், காதல் கொண்டேன் திரைப்படம் எனக்கும், தனுஷிற்கும் முக்கியமான படம் . அந்த படம் தான் திரைத்துறையில் எனக்கு நடிகை என்ற அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு நானும் தனுஷூம் அதிகமாக டேக் எடுத்தோம். ஆனால், அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆறுதலாக இருந்தார்
தனுஷிற்கும் எனக்கும் செல்வராகவன் தான் குரு, செல்வராகவன் படப்பிடிப்பின் போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்.அவர் நினைக்கும் ஷாட் வரும் வரை திட்டி தீர்த்து விடுவார். இதுபோல செட்டில் பல நேரங்களில் அவர் என்னை திட்டி உள்ளார். ஆனால், அந்த நேரத்தில், தனுஷ் தான் எனக்கு ஆறுதலாக பேசி என்னை சமாதானம் செய்வார்.

திருமணம் செய்து கொண்டேன்
தொடர்ந்து பேசிய சோனியா அகர்வால், காதல் கொண்டேன் படப்பிடிப்பின் போதே நானும் செல்வராகவனும் காதலிக்கத் தொடங்கினோம். காதல் கொண்டேன் வெற்றிக்கு பிறகு எனக்கு பல நல்ல படங்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நேரத்தில் என் கேரியரை விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டதாக நடிகை சோனியா அகர்வால் மனம் திறந்து பேசினார்.