Don't Miss!
- News
இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் அதிகரிப்பு! கொதிக்கும் வேல்முருகன்!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா?.. அதுவும் அந்த பாடகரா?
சென்னை : நடிகை சோனியா அகர்வால் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக இணையத்தில் தகவல் வேகமாக பரவிவருகிறது.
பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.
நடிகர் தனுஷின் அண்ணனான இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
திருமூர்த்தியின்
இசை
ஆர்வத்திற்கு
உதவிய
கமல்...இந்த
திருமூர்த்தி
யாருன்னு
தெரியுதா?

சோனியா அகர்வால்
பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சோனியா அகர்வால். இவரது நிதானமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி சென்றார்.

காதல் மலர்ந்தது
இதையடுத்து சோனியா அகர்வால் மீண்டும் செல்வராகவனின் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். செல்வராகவனுடன் படங்களில் இணைந்திருந்த இவருக்கும் இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இருவரும் பிரிந்தனர்
மிகவும் மகிழ்ச்சியாக சில ஆண்டுகள் வந்த இந்த தம்பதிகள் திடீரென பிரிந்தனர். விவகாரத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த சோனியா அகர்வால், சில ஆண்டுகள் கழித்து கிடைத்த சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில், அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கத்தில் உருவான கிராண்மா திரைப்படத்தில் நடித்திருந்தார்.க்ரைம், த்ரில்லர் திரைப்படமான கிராண்மா திரைப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியானது.

சோனியா அகர்வால் இரண்டாவது திருமணமா?
இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால், மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசு காட்டுத்தீபோல பரவி வருகிறது. இந்த வதந்தி பரவியதற்கு முக்கிய காரணமே எஸ்பிபி சரண், சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

ஒரு புதிய விஷயம்
மேலும், அந்த புகைப்படத்தில் எஸ்பிபி சரண் சூட்கோட்டில் இருக்க, சோனியா அகர்வாலின் தோளில் கை போட்டுக்கொண்டு இருந்தார். அதில், 'ஒரு புதிய விஷயம் தயாராகிக்கொண்டு இருக்கின்றது' என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரணுக்கும் சோனியா அகர்வாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு விவாரத்து
எஸ். பி.பி. சரண் ஏற்கனவே இரண்டு விவாகரத்து செய்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பிஜோய் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இதையடுத்து, 2012ம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் இருந்து வருகிறார்.