அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்... நடிகை சமந்தா விவாகரத்து குறித்து பிரபல நடிகை பரபரப்பு கருத்து!

சென்னை: நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து பிரபல நடிகை கூறியிருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும் நாகார்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என தகவல் பரவி வந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாய் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரின் விவாகரத்துக்கும் காரணம் என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

விவாகரத்துக்கு காரணம்

விவாகரத்துக்கு காரணம்

அதாவது நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் ஆபாசமாக நடித்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் உடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

ஆனால் இந்த தகவல்களையெல்லாம் மறுத்தார் நடிகை சமந்தா. மேலும் தன் மீதான வீண் பழி இவை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்களுக்குதான் அவர்களுடைய வாழ்க்கை பற்றி தெரியும் என்றும் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

இந்நிலையில் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்.

தவறான உறவுக்கு வாய்ப்பில்லை

தவறான உறவுக்கு வாய்ப்பில்லை

அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஒன்றாக இருக்க வேண்டும்

ஒன்றாக இருக்க வேண்டும்

சமந்தா விவாகரத்து தொடர்பாக ஸ்ரீரெட்டி வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நீங்கள் இருவரும் பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும், நீங்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் தம்பதிகளாக இருக்க வேண்டும், என்ன நடந்தாலும் நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆடை வடிவமைப்பாளர் விளக்கம்

ஆடை வடிவமைப்பாளர் விளக்கம்

இதனிடையே ஆடை வடிமைப்பாளரான பிரீதம் ஜுகல்கர் சமந்தா தனக்கு சகோதரி போன்றவர் என்றும் தங்களுக்குள் எந்த தவறான உறவும் இல்லை என்றும் கூறி விளக்கமளித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் நாக சைதன்யாவின் அமைதி தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X