For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எவர்கிரீன் கனவுக்கன்னி ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை - நெகிழ்ந்த குடும்பம்

  |
  Sri Devi Birthday Special:Unkown Facts of Female Super Star| Filmibeat Tamil

  சிங்கப்பர்: பாலிவுட் பட உலகின் எவர்கிரீன் கனவுக்கன்னி நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவியுள்ளனர். அவரது மெழுகு சிலை முன்பு நின்று போனிகபூர் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அம்மாவின் அழகான உருவத்தைப் பார்த்து மகள்கள் கண் கலங்கி நின்றனர்.

  சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்களின் போன்றவர்களின் மெழுகு சிலை உருவங்கள் உள்ளன.

  நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

  மெழுகு சிலை

  மெழுகு சிலை

  நிஜ உருவம் போலவே ஒரு சிலை வடிவம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று யூகித்து பாருங்கள். அதுவும் நமக்கு மிகவும் பிடித்தவர்கள், மனத்தில் நிலைத்து நிற்பவர்கள் இவர்கள் நம் அருகில் இருப்பது போல இருந்தால். ஆம் அது நம் கனவுக் கன்னி, நடிகை ஸ்ரீதேவியின் உருவம் தான்.

  ஸ்ரீதேவி

  ஸ்ரீதேவி

  பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருக்கணும், என்று எத்தனை பேர் திருமணத்திற்கு வரன் தேடும் போது கேட்பார்கள். அந்த அளவிற்கு அழகு என்றாலே நமக்கு நினைவுக்கு உடனே வருவது அழகு தேவதை ஸ்ரீதேவி தான் அல்லவோ. அவரின் மறைவு வேண்டுமானாலும் நம்மை அவரிடம் இருந்து பிரித்திருக்கலாம் ஆனால் அவரது முகமோ, நடிப்போ என்றுமே நம் மனதில் நிலைத்து நிற்கும்.

  மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர்

  மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர்

  நடிகை ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாளான ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு அற்புதமான பரிசை அறிவித்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு உருவத்தை மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவ போவதாக அறிவித்தது. பாலிவுட்டின் ஐகான் ஆன ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் இந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்படும் அன்று அறிவிக்கப்பட்டது போல சிலையை நிறுவியுள்ளனர்.

  போனி கபூர் ட்வீட்ஸ்

  போனி கபூர் ட்வீட்ஸ்

  நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகும் அவருக்கு கிடைக்கும் இந்த மரியாதையை நினைத்து நான் மிகவும் மனமகிழ்ந்து உள்ளேன். மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் நடைபெறும் அல்டிமேட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியில் நானும் எனது குடும்பமும் ஒரு பகுதியாக கலந்து கொள்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் போனி கபூர்.

  அழகு தேவதை ஸ்ரீதேவி

  அழகு தேவதை ஸ்ரீதேவி

  சொன்னது போலவே ஸ்ரீதேவி மெழுகு சிலை திறப்பு விழாவில் போனி கபூர் தனது மகள்களுடன் பங்கேற்றார். அம்மாவின் அழகான சிலையை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்தனர் மகள்கள். போனி கபூரும் அவரது மகள்களும் ஸ்ரீதேவியின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எண்பதுகளில் பாலிவுட் உலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி அச்சு அசலாக இருந்ததைப் பார்த்து அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.

  அழகு தேவதையின் சிலை

  அழகு தேவதையின் சிலை

  80களில் பாலிவுட் மட்டுமின்றி அனைத்து இந்திய திரையுலகிலும் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று தற்செயலாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரின் மறைவு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி இந்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. அந்த தேவதையின் அழகு சிலையை நிறுவியுள்ளதன் மூலம் வருங்கால சந்ததியினரும் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அவரது கலை உலக
  வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும்.

  English summary
  Madame Tussauds Singapore has announced that the wax figure of actress Sridevi will be installed at the Wax Museum of Madame Tussauds. The wax statue is set to be installed in the museum in September as a tribute to Bollywood icon Sridevi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X