twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு சினிமான்னா என்னன்னே தெரியாது.. பாலச்சந்தர்தான் கற்றுக்கொடுத்தார்.. சொல்கிறார் சுகாசினி!

    |

    Recommended Video

    இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்தநாள் விழா- பார்த்தீபன் உருக்கமான பேச்சு-வீடியோ

    சென்னை: சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் வந்த ரஜினிகாந்துக்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது கே பாலச்சந்தர்தான் என நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 89வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனம் சார்பில் பாலச்சந்தரின் 89வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் நடிகர்கள் பார்த்திபன், ரஹ்மான், நடிகை சுகாசினி, இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர் தேவதை இல்லை ஆன்ட்டி, லவ் வேண்டாம் தர்ஷன்: எச்சரிக்கும் ரசிகர்கள் அவர் தேவதை இல்லை ஆன்ட்டி, லவ் வேண்டாம் தர்ஷன்: எச்சரிக்கும் ரசிகர்கள்

    முதல் ஷூட்டிங்

    முதல் ஷூட்டிங்

    நிகழ்ச்சியில் பேசிய சுகாசினி, இயக்குநர் பாலச்சந்தர் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் முதன் முதலில் பார்த்த சினிமா ஷூட்டிங் மூன்று முடிச்சுதான்.

    ரஜினி யாரிடமும் பேசமாட்டார்

    ரஜினி யாரிடமும் பேசமாட்டார்

    மூன்று முடிச்சு படத்தில் துணி துவைக்கும் காட்சி ஒன்று வரும் அது எங்கள் வீட்டின் பின்புறம்தான் எடுத்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போதெல்லாம் ரஜினி யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார்.

    ரொம்ப பயப்படுவார்

    ரொம்ப பயப்படுவார்

    சினிமாவுக்கு புதிது என்பதால் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அப்போது பாலச்சந்ரை பார்த்து ரஜினிகாந்த் ரொம்பவே பயப்படுவார்.

     லுக் வைப்பது கஷ்டம்

    லுக் வைப்பது கஷ்டம்

    படப்பிடிப்பு பிரேக்கின் போது எங்கள் வீட்டின் கதவு பக்கமாக நின்று ரஜினிகாந்த் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார். ரஜினி சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு கேமரா லுக் வைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    பாலச்சந்தர்தான் கல்லூரி

    பாலச்சந்தர்தான் கல்லூரி

    மேல பார் என்றால் கீழே பார்ப்பார், கீழே பார் என்றால் மேலே பார்ப்பார். சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிகாந்த் மட்டுமின்றி பலருக்கும் நடிப்பு பயிலும் கல்லூரியாக இருந்தது இயக்குநர் கே.பாலச்சந்தரும் அவரது கலாகேந்திராவும்தான். இவ்வாறு சுகாசினி தெரிவித்தார்.

    English summary
    Actress Suhasini talked about Rajinikanth and Director K Balachander.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X