twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூடுபிடிக்கும் நடிகை தற்கொலை விவகாரம்..ஐபோனை தேடும் போலீஸார்..காதலனுக்கு 55 கிடுக்கிப்பிடி கேள்விகள்

    |

    சென்னை: விருகம்பாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த வாய்தா திரைப்பட கதாநாயகி தீபா கடந்த சனிக்கிழமை கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

    அவரது மரணவழக்கை சந்தேக மரண வழக்காக கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கில் புதிய திருப்பமாக கடிதத்தில் தீபா குறிப்பிட்டுள்ள காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் அனுப்பியுள்ள போலீஸார் 55 கேள்விகளை தயார் செய்து வைத்துள்ளனர்.

    சமந்தாவுக்கு என்னாச்சு என பதறிய ரசிகர்கள்: அமெரிக்கா போனது பத்தி உண்மையை சொன்ன மேனேஜர்!சமந்தாவுக்கு என்னாச்சு என பதறிய ரசிகர்கள்: அமெரிக்கா போனது பத்தி உண்மையை சொன்ன மேனேஜர்!

    தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க என்ன தகுதி வேண்டும்

    தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க என்ன தகுதி வேண்டும்

    திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நடிகையாவது மிகப்பெரிய சிக்கலான ஒன்று. நடிகை கனவுடன் வரும் பலர் சின்ன ரோல்களில் தலைகாட்டிவிட்டு திரையுலகில் உள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் ஒதுங்கிவிடுகின்றனர். சிலர் சீரியல் பக்கம் ஒதுங்குகின்றனர். தமிழில் நாயகியாக நடிக்க ஒன்று வாரிசு நடிகையாக இருக்கணும், வெள்ளையாக ஒடிந்து விழுவதுபோல் இருக்கணும், முக்கியமாக தமிழ் பெண்கள் முக ஜாடை இருக்கக்கூடாது (இருந்தால் ஹீரோவின் தங்கை, நாயகியின் தோழி வேடம் தான்). வட மாநிலம் அது எதுவாக இருந்தாலும் ஓக்கே, கேரளா என்றால் டபுள் ஓக்கே இதுபோன்ற தகுதிகளை மீறி சிலர் நாயகியாக வாய்ப்பு கிடைத்து நடித்தால் அந்தப்படம் ஓட வேண்டும். ஓடாவிட்டால் அதுவும் சிக்கல் தான்.

    அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த தீபா

    அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த தீபா

    இப்படித்தான் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வந்து எப்படியோ வாய்தா என்கிற படத்தில் ஹீரோயின் வேஷத்தை நண்பர் மூலம் பெற்றார் நடிகை பவுலின் என்கிற தீபா. இவரது பூர்வீகம் ஆந்திரா. இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் அது சரியாக போகவில்லை.

    மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நடிகை

    மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நடிகை

    இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீபாவின் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த அவரது நண்பர் பிரபாகரன், தீபா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். தீபாவின் சகோதரர் ராஜு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து பிரேத பரிசோதனைக்கு பின் தீபாவின் உடலை பெற்றுச் சென்றார். தீபாவின் மரணவழக்கை சந்தேக மரணமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதலன் சிராஜுதீன் பெயரை எழுதி வைத்த தீபா

    காதலன் சிராஜுதீன் பெயரை எழுதி வைத்த தீபா

    போலீஸார் விசாரணையில் தீபா எழுதி வைத்த கடிதம் கிடைத்தது. ஒரு போன் கிடைத்தது. அது ஃபாரன்சிக் பிரிவுக்கு அனுப்பப்பட்டு சைபர் பிரிவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கடிதத்தில் தீபா தான் உயிருக்கு உயிராக காதலித்த காதல் கைகூடவில்லை என்பதால் தற்கொலை எனவும் காதலன் என சிராஜுதீன் என்பவர் பெயரையும் எழுதி வைத்துள்ளார். சிராஜுதீன் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை விசாரணைக்கு அழைக்க வண்ணாரப்பேட்டையில் உள்ள சிராஜுதீன் வீட்டுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். அவர் காரைக்குடியில் படபிடிப்பில் இருப்பதால் நாளை விசாரணைக்கு ஆஜராவதாக கூறியுள்ளார்.

    ஐ ஃபோன் எங்கே விசாரணை நடத்தும் போலீஸார்

    ஐ ஃபோன் எங்கே விசாரணை நடத்தும் போலீஸார்

    இதற்கிடையே சைபர் பிரிவு போலீஸார் தீபாவின் செல்போனில் உள்ள தகவல்கள், அவரது சாட்டிங் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது அவரிடம் ஐபோன் ஒன்று இருப்பதும் தற்போது அது மிஸ் ஆகியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த ஐபோனை அவரது சகோதரர் எடுத்துச் சென்றாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். அதைக்கைப்பற்றினால் அதில் மேலும்ம்விவரங்கள் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதற்காக ராஜுவை விசாரிக்க கோயம்பேடு போலீஸார் ஆந்திரா செல்ல உள்ளனர்.

    காதலனுக்காக விசாரணைக்கு காத்திருக்கு 55 கிடுக்கிப்பிடி கேள்விகள்

    காதலனுக்காக விசாரணைக்கு காத்திருக்கு 55 கிடுக்கிப்பிடி கேள்விகள்

    இதற்கிடையே சைபர் பிரிவு போலீஸார் தீபாவின் செல்போனில் உள்ள தகவல்கள், அவரது சாட்டிங் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது அவரிடம் ஐபோன் ஒன்று இருப்பதும் தற்போது அது மிஸ் ஆகியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த ஐபோனை அவரது சகோதரர் எடுத்துச் சென்றாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். அதைக்கைப்பற்றினால் அதில் மேலும் விவரங்கள் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதற்காக ராஜுவை விசாரிக்க கோயம்பேடு போலீஸார் ஆந்திரா செல்ல உள்ளனர்.

    English summary
    'Vaitha' Movie heroine Deepa, who lived in an apartment in Virugambakkam, hanged herself last Saturday after writing a letter. The Koyambedu police have registered a case of his death as a case of suspicious death and are investigating. In a new twist in the case, the police have summoned Sirajuddin, the boyfriend mentioned by Deepa in the letter, and have prepared 55 questions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X